[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 06:24.43 AM GMT ]
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவது பொது வேட்பாளரின் பொறுப்பு என தெரிவித்துள்ள சோபித தேரர், அரசாங்கத்தை கவிழ்க்கும் எண்ணம் தமக்கில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பினர் மது அருந்தும், கிரிக்கெட் விளையாடும், நடனமாடும் காணொளி ஒன்று தன்னிடம் இருப்பதாக ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரெக்க விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தலில் வெற்றிப் பெறும் பொது வேட்பாளர் ஆறு மாதங்களே ஜனாதிபதி பதவியில் இருப்பார். ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கி விட்டு பதவியில் இருந்து விலக வேண்டும்.
நாட்டில் அமுலில் இருக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தை, அதனை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி, மாநாயக்க தேரர்கள், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மட்டுமல்லாது முழு நாட்டு மக்களுக்கு எதிர்க்கின்றனர்.
மகிந்த ராஜபக்ஷ இந்த அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்றார்.
அத்துடன் மகிந்த சிந்தனையிலும் நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
எவ்வாறாயினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை பொது வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை. பொது வேட்பாளர் தொடர்பாக பேசுவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது எனவும் மாதுளுவாவே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவினர் மது அருந்தும் காணொளி என்னிடம் உள்ளது: வட்டரெக்க விஜித தேரர்
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 06:05.46 AM GMT ]
பொதுபல சேனா மற்றும் விஜித தேரர் ஆகிய இருத்தரப்பு தொடர்பான செய்திகளை நாட்டில் ஊடகங்களில் பரப்பரப்பாக வெளியாகி வருகின்றன.
பொதுபல சேனா அமைப்பு பயங்கரவாத அமைப்பு எனவும் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் மத ஐக்கியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தன்னை அந்த அமைப்பு கொலை செய்ய முயற்சித்து வருவதாகவும் விஜித தேரர் குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்த நிலையில், ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட விஜித தேரர் மேலும் தெரிவிக்கையில்,
என்னை கொலை செய்ய முயற்சித்து வருவதால், நான் இப்போது ஒரு இடத்தில் தங்குவதில்லை. மாறி மாறி இருந்த வருகிறேன்.
மஹியாங்கனையில் அண்மையில் என்னை கொல்ல முயற்சித்தனர். பொலிஸார் என்னை காப்பாற்றினர்.
பொதுபல சேனா சம்பந்தப்பட்ட சிறந்த காணொளி ஒன்று என்னிடம் உள்ளது. வில்பத்து வனத்தில் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அதில் பதிவாகியுள்ளன.
என்னை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசினாலும் அதனை பகிரங்கமாக வெளியிட மாட்டேன்.
அத்துடன் இந்த காணொளியை நான் அரசாங்கத்திற்கு பொலிஸாரிடமோ கையளிக்க போவதில்லை.
பொதுபல சேனா அமைப்பினர் வாகனத்தில் அமர்ந்து மது அருந்துவது, கிரிக்கெட் விளையாடுவது, நடனமாடுவது போன்ற காட்சிகள் அந்த காணொளியில் உள்ளன.
பொதுபல சேனா அமைப்பை போல் நாங்கள் மத விரோத, இனவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை எனவும் விஜித தேரர் குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten