[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 11:40.58 PM GMT ]
நெடியவன் இன்னடர்போலினால் தேடப்படுபவர்களின் பட்டியலில் கடந்த வாரம் இணைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் நோர்வேயில் இருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றிருப்பதாக தங்களுக்கு தகவல் கிடைத்திருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அவரைக் கைது செய்யும் நோக்குடன், நோர்வே காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyERcLXeu3.html
இலங்கை விடயத்தில் இரண்டு வெளியுறவுக் கொள்கையை இந்தியா கடைப்பிடித்துள்ளது!– த டிப்லோமெட்
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 11:35.31 PM GMT ]
இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை ஒரு சிறந்த நாட்டுக்கு இருக்க வேண்டிய காத்திரமான பண்புகளை கொண்டிருக்கவில்லை.
இலங்கை விடயத்திலும் அது இரட்டை நிலைப்பாட்டில் காணப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்ற அமெரிக்க பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பில் ஒரு மாதிரியும், அதன் பின்னர் லோக்சபா தேர்தலின் நிமித்தம் வேறொரு மாதிரியும் இந்தியாவின் இலங்கை தொடர்பான வெளிநாட்டுக் கொள்கை அமைந்திருக்கிறது.
இந்த நிலையால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படவுள்ளன.
இதேநேரம் இந்தியாவின் இராணுவத்தினரும் 19ம் நூற்றாண்டில் உள்ள மனோநிலையிலும், 20ம் நூற்றாண்டில் உள்ள ஆயுதங்களுடனும், 21ம் நூற்றாண்டின் இலக்குகளுடனும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் புதிதாக தெரிவாகின்ற பிரதமர் இந்த விடயங்களில் அவதானம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyERcLXeu2.html
Geen opmerkingen:
Een reactie posten