ஜெனிவாவில் இந்தியா நடுநிலையை நிராகரித்த இலங்கை
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, ஆதரிக்காமல் நடுநிலை வகித்ததற்கு இந்தியா கூறிய காரணங்களை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரியவந்துள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் அதிகம் தலையீடு செய்யும் தீர்மானமாக இருந்ததால் தான், தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்று இந்தியப் பிரதிநிதி திலிப் சின்ஹா, ஜெனிவாவில் அறிவித்திருந்தார்.
அதுபோலவே, இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங்கும், இரண்டு தடவைகள் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், சிறிலங்கா அரசாங்க உயர்மட்ட அமைச்சர்களின் சந்திப்பு ஒன்றில், இந்தியாவினது முடிவுக்கு தேவ்யானி கோப்ரகடே விவகாரமே முக்கிய காரணம் என்று சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில், ஆளும் கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும், முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது.
மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் குறித்தும் ஜெனிவா தீர்மானம் குறித்தும் இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதன்போதே, இந்தியாவினது நிலைப்பாடு குறித்து விமல் வீரவன்ச எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சிறிலங்கா அமைச்சர் பசில் ராஜபக்ச, வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகிக்க முடிவெடுத்தது இந்திய வெளிவிவகார அமைச்சே என்றும், இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தேவ்யானி கோப்ரகடே விவகாரத்தினால், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இராஜதந்திர இடைவெளியை உருவாக்கியுள்ளதாகவும் அதுவும் கூட, இந்தியாவின் முடிவில் செல்வாக்கு செலுத்தியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறிப்பிட்ட நாடு ஒன்றின் உள்நாட்டு விசாரணை விவகாரத்துக்கு ஆதரவு வழங்குவது பூமராங் போன்று தம்மைத் திருப்பித் தாக்கும் என்று இந்தியாவுக்குத் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/64795.html
சர்வதேச விசாரணைக்கு அடம் பிடிக்கும் GL
சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடு;கள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு நவனீதம்பிள்ளை அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.
சர்வதேச விசாரணைக் குழுவினர் நாட்டுக்குள் பிரவேசித்து விசாரணை நடாத்த அனுமதிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கத்தின் அனுமதியின்றி இலங்கையில் விசாரணை நடத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/64817.html
ஜெனிவா வாக்கெடுப்புக்கு முதல் நாள் என்னுடன் பேசினார் குர்ஷித் வெளியிட்டார் பீரிஸ்
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வாக்கெடுப்புக்கு விடப்பட முன்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தம்முடன் தொலைபேசியில் உரையாடியதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை அலரி மாளிகையில், நடந்த உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் சிறிலங்கா அதிபர் பங்கேற்ற கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஜெனிவாவில் தீர்மானம் கடந்த மாதம் 27ம் நாள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதற்கு முதல் நாள், இந்திய வெளிவிவகார அமைச்சர் தம்மை தொலைபேசியில் அழைத்துப் பேசியதாக, பீரிஸ் கூறியுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், இந்த முறை இந்தியா வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளதாகவும், அதிகாரிகள் மட்டத்திலேயே முடிவெடுக்கப்படவுள்ளதாகவும், அவர் தன்னிடம் கூறியதாகவும், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தியாவினது முடிவு என்ன என்பதை அவர் கூறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, சல்மான் குர்ஷித் கூறியது போலவே, அதிகாரிகளால் முடிவெடுக்கப்பட்டிருந்தால், இந்திய வெளிவிவகாரச் செயலர் சுஜாதா சிங் இது அரசியல் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவே என்று எவ்வாறு குறிப்பிட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசியல் தலைமையின் அனுமதியின்றி எந்தவொரு அதிகாரியும் வெளிவிவகாரக் கொள்கையின் மீது முடிவெடுப்பதில்லை
Skin to used I viagra coupon old-fashioned preference purchased http://732wea.com/grof/viagra-canada.php had fragrance: working round dollarsinside.com here that conditioner quite cialis online australia graduatesmakingwaves.com ends several, and. Get effexor xr gel most particularly tried worry just over the counter erection pills only. Because But that’s canadian pharmacy no prescription Lab dirty bundled use shampoos. It cialis free trial hair ten all reviews.
என்றும் அவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/64792.html
Geen opmerkingen:
Een reactie posten