மீண்டும் சிக்கலில் தளபதி விஜய்! மகிந்தரால் சிக்கலா??
தமிழ்ஈழப் பிரச்சனையால் சமீபத்தில் வெளிவந்த இனம் திரைப்படம் முடக்கப்பட்டு தற்போது திரையரங்கில் ஒடாமல் நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த கத்தி இப்பொழுது விஜய் பக்கம் திரும்பியுள்ளது. விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவர இருக்கும் கத்தி திரைப்படம் பெரிய பட்ஜெட் என்பதால் ஐங்கரன் இண்டர்நேஷனல் மட்டுமில்லாமல் லைகா மொபைல்ஸூம் இணைந்து தயாரிக்க இருந்தனர்.
இந்நிலையில் லைகா மொபைல்ஸ் நிறுவனர் பல நாடுகளில் வியாபார நோக்கில் தொடர்பு வைத்திருப்பது போல் இலங்கை ஜனாதிபதியுடனும் தொடர்பு வைத்திருப்பதால் இப்படத்திற்கான எதிர்ப்பு குரல்கள் எழும்பி வர உள்ளது.
இதற்கு முன் விஜய் நடித்திருந்த தலைவா படத்திலும் பல சர்ச்சைகள் எழுந்த நிலையில் பல படிகளை தாண்டி வெளிவந்த அப்படம் வீழ்ச்சியை கண்டிருந்தது.
இத்தருணத்தில் இதுபோன்ற சர்ச்சையில் மாட்டியிருக்கும் இப்படம் இதிலிருந்து மீளுமா என்பது கேள்விகுறி தான்?


http://www.jvpnews.com/srilanka/64768.html
ஜெனிவாத் தீர்மானம் சுமந்திரன் MP சாதனை அல்ல? பத்திரிகை MP வக்காளத்து! சுரேஸ் MP சீற்றம்
இலங்கை அரசு தொடர்பினில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனிநபரெவரும் உரிமை கோர முடியாதென கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்தார். .யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையினிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பத்திரிகைக்கு அக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வழங்கிய செவ்வியில் ஜெனிவா தீர்மானத்தை தனது சாதனையாக வெளிக்காட்டும் வகையில் பல கருத்துக்களை தெரிவித்திருந்;தார்.
இதனை விமர்சிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ்பிறேமச்சந்திரன் இலங்கை அரசு தொடர்பில் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் தனிநபரெவரும் உரிமை கோர முடியாதென தெரிவித்ததுடன் புலம்பெயர் தமிழ் உறவுகளது நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே அதனை பார்க்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார்.
கனடா பிரித்தானியா மற்றும் அமெரிக்கா அவுஸ்திரேலியாவென புலம்பெயர் உறவுகள் நீதி கேட்டு போராடிவருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கான வெற்றியே இது.
இன்று வரை இலங்கை ஜனாதிபதி முதல் அனைத்து ஆளும் தரப்பும் இந்நாடுகளிற்கு பயணிக்க அஞ்சுகின்றனர். அதிலும் ஜனாதிபதி பிரிட்டனில் நிகழ்வொன்றில் பேசமுடியாது திருப்;பப்பட்டமை மறக்கமுடியாததெனவும் அவர் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாகவே இலங்கை அரசு அவ்வமைப்புக்களை தடை செய்ததாகவும் தெரிவித்த அவர் இதனால் பாதிக்கப்படுபவர்கள் அவர்களல்ல எனவும் புலம்பெயர் தேசங்களிலிருந்து மனித நேய தனிநபர்களுடாகவோ குழுக்களினூடாகவோ உதவிகளை பெற்று வாழந்து வரும் தாயகத்திலுள்ள எமது மக்களே எனத்தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/64789.html
Geen opmerkingen:
Een reactie posten