[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 07:16.45 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1969 ஆம் ஆண்டு ஜே.வி.பி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து அரசியல் அமைப்பாகவே செயற்பட்டது.
நாங்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடவில்லை. அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஜே.வி.பியை தடைசெய்தது.
அதற்கு எதிரான நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்தோம். அன்றைய ஜனாதிபதி ஜே.ஆருக்கு கடிதம் மூலம் அறிவித்தோம்.
சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் முறையிட்டோம். தடையை மீறி நாங்கள் அரசியலில் ஈடுபட்டு வந்தோம்.
ஜே.வி.பியை பயங்கரவாத அமைப்பாக எப்போதும் பெயரிடப்படவில்லை. இனிமேலும் அப்படி பெயரிடப்பட போவதுமில்லை.
எம்மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு பதிலளிக்க சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை.
இனவாத அமைப்புகள் போன்று ஜே.வி.பி இனவாத அணியில் சேர்ந்து விடவும் இல்லை என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjw1.html
தேசிய ஐக்கியமின்றி அபிவிருத்தியை தக்கவைக்க முடியாது!- டியூ. குணசேகர
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 07:06.09 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை சுதந்திரம் பெற்ற பின்னர் சுமார் 10 தமிழ் அரசியல் கட்சிகள் உருவாகின. கடந்த 60 வருடங்களாக பல அரசாங்கங்கள் ஆட்சியில் இருந்தன. எனினும் தேசிய ஐக்கியம் ஏற்படவில்லை.
அதேபோல் நாட்டின் பொருளாதாரம் போன்றே நாட்டின் அபிவிருத்தியும் பாதிப்பானது.
நாட்டில் தேசிய ஐக்கியம் இல்லாதது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பல பிரச்சினைகள் ஏற்பட காரணமாகியுள்ளது.
நாடு பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்தாலும் தேசிய ஐக்கியம் இல்லாது போனால் அதனை தக்க வைக்க முடியாது. சகல அரசியல் கட்சிகளும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும்.
தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியாவுக்கோ, ஐ.நாவுக்கோ என்ற தமது பிரச்சினைகளை கூறுவதில் பயனில்லை. அவற்றை உள்நாட்டில் தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் டியூ. குணசேகர குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjw0.html
Geen opmerkingen:
Een reactie posten