அவுஸ்திரேலியாவில் மீண்டும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு 1 வருடத்துக்கு நிபந்தனை அடிப்படை வீசாவான Bridging Visa Conditions வீசா வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முதல் வந்த புகலிடக் கோரிக்கையலர்களின் விசாக்கள் முடிவடைந்த நிலையில் பலருக்கு இதுவரைக்கும் விசா புதுப்பிக்கப்படாத நிலையில் இருக்கின்றது.
தற்போது நடைமுறையில் உள்ள BVC என்னும் நிபந்தனை அடிப்படையிலான விசாவில் பல பிரச்சினைகள் உள்ளதால் எதிர்க்கட்சிகள், வழக்கறிஞர்கள், அகதி செயற்பட்டாளர்கள் என பல தரப்பு செயற்பட்டாளர்களும் இந்த விசாவை மாற்றக்கோரி பல எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
கடந்த மாதம் செனட் சபையிலும் நிரந்தர வதிவிட வீசா வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் டோனி அபட் அரசாங்கம் புகலிடக் கோரிக்கையளர்கள் தொடர்பில் அவர்களுடைய கடும்போக்கு தன்மையை கைவிடவில்லை.
மீண்டும் புகலிட கோரிக்கையலர்களுக்கு 1 வருடத்துக்கு நிபந்தனை அடிப்படை வீசாவான BVE வீசாவே வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் புகலிடக் கோரிக்கையாளர்களை நடத்தும் விதம் மிகவும் கவலை அளிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அகதிகள் தமது அடிப்படை உரிமைகளைப் பெற அவுஸ்திரேலிய அரசாங்கம் தடை
இலங்கை அகதிகள் தமது அடிப்படை ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தடைவிதித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி அங்குள்ள இலங்கை அகதிகள் தங்களை நேர்மையான அகதிகள் என்பதை நிரூபித்து, அகதி அந்தஸ்தினை பெற்றுக் கொள்வற்கு சட்ட ரீதியான மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடமளிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சோசலிச நிபுணர்களின் இணையத்தளம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த மாதம் அங்குள்ள அகதிகள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு தடை விதித்திருந்தது.
கடந்த மாதம் செனட் சபையிலும் நிரந்தர வதிவிட வீசா வழங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலும், டோனி அபட் அரசாங்கம் புகலிடக் கோரிக்கையளர்கள் தொடர்பில் அவர்களுடைய கடும்போக்கு தன்மையை கைவிடவில்லை.
இதன் மூலம் அகதிகளின் பாதுகாப்பு வீசாவுக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அகதிகள் மேற்கொள்ள வேண்டி சட்ட நவடிக்கைகளுக்கான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.
இது சர்வதேச அகதிகள் சட்டத்துக்கு எதிரானது என்று அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXju3.html
Geen opmerkingen:
Een reactie posten