[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 02:49.55 PM GMT ]
பயங்கரவாத அமைப்பாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு குழு அறிவித்தமை தொடர்பில் பொதுபல சேனா வெளியிட்ட எதிர்க்கருத்துக்கு குறித்த அமெரிக்க தள அமைப்பு பதில் வழங்கியுள்ளது.
தமது குழு. பொதுபலசேனாவின் தீவிர நடவடிக்கைகள் தொடர்பான சாட்சியங்களையும் காணொளிகளையும் உரியமுறையில் பரீட்சித்த பின்னரே அந்த அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது என்று பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு குழுவின் ஆசிரியர் பீட பணிப்பாளர் வேர்யன் கான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் இந்த விளக்கத்தை அளித்துள்ளார். பொதுபலசேனா அமைப்பினர், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் போன்றவற்றின் மீது தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
ஹலால் விற்பனை நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இவையாவும் அமைப்பின் மீது குற்றம் சுமத்தக்கூடிய ஏதுக்களாக அமைந்தன.
இலங்கையில் ஐக்கிய தேசியக்கட்சி, ஜே.வி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவனவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் போது ஏன் அவற்றை பயங்கரவாத குழுக்களாக அறிவிக்கவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த வேர்யன் கான், ஆபத்தான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அமைப்புகளே பயங்கரவாத அமைப்புக்கள் என்று வகுதிக்குள் வருவதாக குறிப்பிட்டார்.
இதேவேளை சாதாரண பார்வையாளர்கள் தமது அமைப்பின் தரவுகளில் 10 வீதத்தையே பார்வையிட முடியும் என்று குறிப்பிட்ட வேர்யன், தமது அமைப்புடன் அங்கத்துவங்களை கொண்டிருப்பவர்களே அனைத்து பகுப்பாய்வுகளையும் பார்க்க முடியும் என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjt3.html
புத்தசாசனத்தை அழிக்கும் நபர்களுக்கு பிரதமர் எச்சரிக்கை
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 08:12.23 AM GMT ]
புத்தசாசனத்திற்குள்ளேயே அதனை அழிக்கும் நபர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நிலைமையானது பௌத்த மக்களுக்கும், பௌத்த பிக்குகளுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளது.
அப்படியான நபர்களை புத்தசாசனத்தில் இருந்து நீக்கும் வகையில் குறித்த சட்டத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சட்டத்திற்கு 31 தலைமை பௌத்த பிக்குகளில் உதவியும் கிடைத்துள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjw2.html
Geen opmerkingen:
Een reactie posten