தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

இந்தியாவுக்கான தூதுவராக கோத்தாவின் நெருங்கிய சகா

ஜெனிவாவில் இலங்கைக்காக போராடிய பாகிஸ்தானுக்கு தொலைபேசியில் வாழ்த்திய மகிந்த

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவைக் காப்பாற்றப் போராடிய, பாகிஸ்தானுக்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசி மூலம், தொடர்பு கொண்ட சிறிலங்கா அதிபர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு ஆதரவாக தீவிரமாகச் செயற்பட்டதற்காக நன்றி கூறியுள்ளார்.
ஐ.நாவுக்கான பாகிஸ்தான் பிரதிநிதி சமீர் அக்ரமுக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
முன்னதாக, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள சிறிலங்கா அதிபர் முயன்றிருந்தார்.
ஆனால், அப்போது ஷெரீப் லண்டனில் இருந்ததால், தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, எதிர்த்து பாகிஸ்தான் பிரதிநிதி கடுமையான போராட்டம் நடத்தியிருந்தார்.
அனைத்துலக விசாரணைக்கான நிதி ஒதுக்கீட்டை காரணம் காட்டியும், தீர்மானத்தின் 10வது பந்தியை நீக்கும் திருத்த யோசனையை முன்வைத்தும், தீர்மானத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கவும், வலுவிழக்கச் செய்யவும் சமீர் அக்ரம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/64696.html

இந்தியாவுக்கான தூதுவராக கோத்தாவின் நெருங்கிய சகா

இந்தியாவுக்கான புதிய தூதுவராக சுதர்சன் செனிவிரத்னவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.
வெளிநாடுகள் சிலவற்றுக்கான சிறிலங்காவின் புதிய தூதுவர்களை நியமிப்பது தொடர்பாக, உயர்பதவிகளுக்கான சிறிலங்கா நாடாளுமன்றத்தின் குழு இந்தமாதம் பரிசீலனை மேற்கொள்ளவுள்ளது.
மூத்த இராஜதந்திரிகளான, பிரசாத் காரியவசம், அமெரிக்காவுக்கும், கருணாதிலக அமுனுகம, ஜேர்மனிக்கும், சரத் கோன்கககே, தென்னாபிரிக்காவுக்கும், சுதர்சன் செனிவிரத்ன இந்தியாவுக்குமான தூதுவர்களாக பெயர் முன்மொழியப்பட்டுள்ளனர். 2009ம் ஆண்டு டிசெம்பரில் நியமிக்கப்பட்ட இந்தியத் தூதுவராக உள்ள பிரசாத் காரியவசம் தமது பணிக்காலத்தை பூர்த்தி செய்துள்ளார்.
பல்வேறு நாடுகளில் இராஜதந்திரியாகப் பணியாற்றிய இவரை அமெரிக்காவுக்கான புதிய தூதுவராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜேர்மனியில் உள்ள சிறிலங்கா தூதுவர் சரத் கோன்கககேயின் பணிக்காலம் வரும் ஜுன் மாதம் நிறைவடையவுள்ளது. அவரை தென்னாபிரிக்காவுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படவுள்ள சுதர்சன் செனிவிரத்ன, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி வரும் ஒரு கல்வியாளர் ஆவார். இவர் முன்னர் இராஜதந்திரியாகப் பணியாற்றியவரல்ல.
ஆனால், சிறிலங்கா மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றியிருந்தார். அதேவேளை, இந்தியத் தூதுவராக பெயர் முன்மொழியப்பட்டுள்ள பேராசிரியர் சுதர்சன் செனிவிரத்ன, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய நண்பரும், நலன்விரும்பியுமாவார்.
இவர்கள் இருவரும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் ஒன்றாக கல்வி கற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில், சிறிலங்காவுக்கு சாதகமான நிலையை உருவாக்கிக் கொள்வதற்காகவே, இவரை சிறிலங்காவின் தூதுவராக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும், பேராசிரியர் சுதர்சன் செனிவிரத்ன, புதுடெல்லி இந்துக்கல்லூரியில் இளமாணிப் பட்டத்தையும், புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுமாணிப்பட்டத்தையும் பெற்றவர். தொல்லியல் ஆய்வுகள் தொடர்பாக இந்தியாவுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருப்பவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/64699.html

Geen opmerkingen:

Een reactie posten