தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 7 april 2014

இலங்கை அரசின் 424 தடை நபர்களில் 32 புலிகள் இந்தியாவிலாம்…

424 தடைப் பட்டியலில் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் மற்றும் ஆலய பரிபாலன சபைப் பெயரும்

இலங்கை அரசு சில அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீது தடை விதித்து வெளியிட்டுள்ள பட்டியலில் பல குளறுபடிகளும் பிழைகளும் இருப்பதாக விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை விடுதலைப் புலிகள் உட்பட 16 அமைப்புகள் மற்றும் 400 இற்கும் அதிமான தனி நபர்களுக்கு தடை விதித்து வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களும் உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெவித்தார்.
நாட்டை ஆளும் கூட்டணிக்கு தலைமையேற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு அமைப்பாளர் என்று கூறப்படுபவரின் பெயரும் அதில் உள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர்களின் பெயர்கள் மற்றும் ஆலய பரிபாலன சபையின் நிர்வாகப் பொறுப்பிலுள்ளவர்களின் பெயர்களும் அதில் உள்ளன எனக் கூறும் அரியநேத்திரன், அதன் காரணமாக உள்ளூர் மக்கள் பெரும் கவலையும் கலக்கமும் அடைந்துள்ளதாகவும் கூறுகிறார்.
அரசின் பட்டியல் வெளியானதை அடுத்து தமிழ் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு மீண்டும் எற்பட்டுள்ளது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். உள்ளூர் மக்களின் பெயர்களும் அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் இருப்பது தொடர்பில் பலர் தொடர்ச்சியாகத் தன்னிடம் வந்து முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் இதன் காரணமாக சமூகப் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன எனறும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவை மட்டுமல்லாமல் கனடாவிலிருந்து இயங்குவதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ள சில அமைப்புகள் தற்போது இயங்கவில்லை என்றும் அவை இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ள விலாசங்கள் தவறானவை என்று செய்திகள் வந்துள்ளன.
BBC
http://www.jvpnews.com/srilanka/64702.html

இலங்கை அரசின் 424 தடை நபர்களில் 32 புலிகள் இந்தியாவிலாம்…

இலங்கை அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்ட 424 தனி நபர்களில் 32 பேர் இந்தியாவில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வர்த்தமானியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த 32 பேரில் 6 பேரின் இந்திய முகவரிகள் மாத்திரமே அதில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏனையவர்கள் அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் வசிக்கும் போது இருந்த முகவரிகள் பிரசுரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த தடை செய்யப்பட்டவர்களை கைது செய்வதற்கான கோரிக்கையை இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையிடம் முன்வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
http://www.jvpnews.com/srilanka/64709.html

Geen opmerkingen:

Een reactie posten