இலங்கை அணி வெற்றியால் ஆடையைக் களைந்தவரால் கொழும்பில் பரபரப்பு
பங்களாதேஷில் நடைபெற்று வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையில் இன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்- இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது அரையிறுதிப்போட்டி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
அந்த போட்டியை கொள்ளுப்பிட்டியிலுள்ள லிபர்ட்டி பிளாஸா கட்டடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த பாரியளவான திரையில் பலரும் கண்டுகளித்துகொண்டிருந்துள்ளனர்.
அங்கு போதையிலிருந்த இளைஞன் ஒருவர், இலங்கை அணி வெற்றிப்பெற்றதையடுத்து ஆடைகளை களைந்து உடலில் ஒருதுண்டு துணியில்லாமல் நிர்வாணமாக நின்றுகொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்போதே அவரை 2500 ரூபா பிணையில் கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே நீதவான் விடுதலை செய்தார்.
அன்றைய போட்டியை மழை குறுக்கிட்டமையினால் டக்வத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 27 ஓட்டங்களால் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்தாகும்.









http://www.jvpnews.com/srilanka/64689.html
சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை – கம்மன்பில
சர்வதேச ரீதியான விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட முடியாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எந்தவொரு நாடும் தனது இறைமையை பணயம் வைக்க விரும்புவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக ரீதியான விசாரணைகளே பொருத்தமானதாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்காக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். வெறுமனே நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படும் வகையிலான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிசாந்தி குமாரசுவாமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு இராணுவ வீரர்களுக்கு மரண தண்ட விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
40000 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கைள நிரூபிக்க எவ்வித ஆதாரங்களும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/64692.html
Geen opmerkingen:
Een reactie posten