தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை தொடர்பில் வெளிநாடுகளுக்கு விளக்கம்!

ஈழத் தமிழர் பிரச்சினையை தீர்க்கும் இராஜதந்திரம் காங்கிரஸுக்கு தெரியவில்லை!– ராஜ்நாத் சிங்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 11:48.21 PM GMT ]
ஈழ மக்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் பாரதீய ஜனதா கட்சி உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அரசியல் பிரச்சினையை தீர்ப்பதற்கு பலவீனமான காங்கிரஸ் கட்சி இராஜதந்திர அறிவினைப் பெற்றிருக்கவில்லை.
இந்த விடயத்தை மிகவும் கவனமாக கையாண்டிருக்க வேண்டும்.
பேச்சுவார்த்தைகளே இலங்கையில் தீர்வினை பெற்றுத் தரும்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், இலங்கை அரசாங்கத்தை தமிழ் தரப்புக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjuy.html
புலம்பெயர்ந்த அமைப்புக்களின் தடை தொடர்பில் வெளிநாடுகளுக்கு விளக்கம்!
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 12:01.06 AM GMT ]
வெளிநாடுகளில் செயல்பட்டு வந்த 16 புலம்பெயர் தமிழ் குழுக்கள் மற்றும் அவற்றின் நடவடிக்கைகள் தொடர்பாக வெளிநாடுகளுக்கு இலங்கை அரசாங்கம் விளக்கமளிக்கவுள்ளது.
இதற்காக வெளிவிவகார அமைச்சும், பாதுகாப்பு அமைச்சும் இணைந்து, இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்கான மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது.
இந்த மாநாடு எதிர்வரும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதற்கு தலைமை தாங்கவுள்ளார்.
இந்த சந்திப்பின் போதுää 16 தமிழ் அமைப்புக்களை அரசாங்கம் தடைசெய்ததற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjuz.html

Geen opmerkingen:

Een reactie posten