[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 12:09.02 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சி இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பில் சர்வதேச பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்யவிருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்றும் கோரி சபாநாயகரிடம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையம் மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியவற்றிற்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுவொன்று நேற்று முன்தினம் விஜயம் செய்திருந்தது.
இந்தக் குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் பீ பெரேரா, ஆர். யோகராஜன், நளின் பண்டார, எரான் விக்கிரமரட்ன மற்றும் அஜித் மன்னபெரும ஆகியோர் அடங்கியிருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, சிலர் மத்தளயில் வைத்து உயிரச்சுறுத்தல் விடுத்ததுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சென்றதன் பின்னர் முட்டை வீசி தாக்கியதாக அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXju0.html
சண்சீ கப்பலின் மூன்று அகதிகளின் குடியேற்றம் தொடர்பில் கனடாவின் உயர் நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது!
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 12:27.37 AM GMT ]
கனடாவின் உயர் நீதிமன்றம் இதனை அறிவித்திருப்பதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எம்.வி.சண்சீ கப்பல் மூலம் கடந்த 2010ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13ம் திகதி 489 இலங்கை அகதிகளுடன் கனடா சென்ற கணவன் மனைவி ஆகிய இருவரும், மேலும் ஒரு இலங்கையரும் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் மூவரும் கப்பலில் பணியாற்றி வந்த நிலையில், அவர்கள் ஆட்கடத்தலுக்கு ஒத்துழைத்தாக கூறி, அவர்களை கனடாவிற்குள் அனுமதிக்க முடியாது என்று அந்த நாட்டின் குடிவரவு சபை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் அவர்களை நாடு கடத்துவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பை கனடாவின் உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXju1.html
Geen opmerkingen:
Een reactie posten