சிறப்பு தூதுவர்களை இலங்கைக்கு அனுப்பும் அமெரிக்கா
அமெரிக்காவின் முன்னாள் பெண்கள் தேசிய கூடைப்பந்தாட்ட வீராங்கனைகளான தமிக வில்லியம்ஸ், எட்னா கம்பெல் ஆகியே இருவருமே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிறப்பு தூதுவர்களாக சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
வரும் 21ம் நாள் தொடக்கம் 25ம் நாள் வரை இவர்கள் சிறிலங்காவில் பயணம் மேற்கொள்வர் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் பணியகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுத்தல், குழுப்பணியின் முக்கியத்துவம், கலாசார தொடர்பாடல்களை வலுப்படுத்தல் ஆகிய நோக்கங்கள் கருதி, இவர்கள், சிறிலங்காவில் கூடைப்பந்தாட்ட நுட்பங்கள் குறித்து போதிக்கவுள்ளனர்.
உள்ளூர் சமூகங்களினது தலைமைத்துவ ஆற்றலை கட்டியெழுப்பும் வகையில் இவர்களின் பயணம் இடம்பெறும்.
கொழும்பு. காலி, மாத்தறை மாவட்டங்களில் இவர்கள் பெண்களுடனான கலந்துரையாடலிலும் பங்கேற்பர்.
இவர்கள் நாடு திரும்பிய பின்னரும், சிறிலங்காவுடனான தொடர்புகளைப் பேணிக் கொள்வதுடன், பயிற்சியாளர்களுக்கு வழிகாட்டலையும், உதவிகளையும் வழங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/66142.html
தாக்குதலுக்கு இலக்கான தேரர் காலமானார்
இவர் கடந்த மாதம் 15ஆம் திகதி அதிகாலை 4.30 மணியளவில் கூரிய ஆயுதத்தினால் இனந் தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகினார்.
இந்நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தேரர் பின்னதாக கராப்பிட்டய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ஒரு மாதத்திற்கும் அதிக காலம் சிகிச்சை பெற்று வந்த தேரர் இன்று (19) அதிகாலை காலமானார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் எல்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.jvpnews.com/srilanka/66145.html
Geen opmerkingen:
Een reactie posten