[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 01:51.29 PM GMT ]
இன்று அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சிகளின் போட்டியில்லை. இந்த குறையை தீர்ப்பத்றகு இரண்டு குழுக்கள் நாட்டில் செயற்படுகின்றன.
1948ஆம் ஆண்டு காலப் பகுதியில் இந்த நாடு சுதந்திரம் அடைந்ததும், சம உரிமை சிறுபான்மை இனத்திற்கு வழங்கப்பட்டிருந்தால் போர் ஏற்பட்டிருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார்.
ஒன்று ஊடகங்கள் மற்றையது ஆளும் கட்சியின் ஒரு சில குழுக்கள். புத்தி கூர்மையுடன் அரசாங்கதை வழிநடத்தும் எதிர்க்கட்சியாக ஊடகங்கள் திகழ்கின்றன.
எதிர்க்கட்சிகளின் சார்பில் குழப்பங்களை செய்யும் தரப்பாக ஆளும் கட்சியின் ஓர் தரப்பினர் செயற்படுகின்றனர். இதன் ஓர் கட்டமே அண்மையில் ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்றது.
தந்தையின் தலையில் உள்ள நுளம்பை பெரிய பந்து ஒன்றினால் தாக்கிய மகன் பற்றி கிராமத்து கதைகளில் படித்ததுண்டு. அவ்வாறானவர்கள் ஆளும் கட்சியிலும் இல்லாமில்லை.
ஆளும் கட்சியின் சில முட்டாள்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
அமைச்சர் ரிசாத் பதியூதீன் போன்றவர்கள் இவ்வாறான முட்டாள்களே என சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தியினைக் காட்டி தமிழர்களை அடிபணிய வைக்க முடியாது: பொன். செல்வராசா
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 01:10.10 PM GMT ]
களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழா ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று எடுத்தற்கெல்லாம் அபிவிருத்தி என்று சொல்லுகின்றார்கள். ஆனால் அபிவிருத்தியை நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. அபிவிருத்தி என்பது மனிதனுக்குத் தேவையான ஒன்று ஒரு இறைமையுள்ள அரசாங்கம் மனிதனுக்கு தேவையானவற்றைச் செய்து முடித்துதான் ஆகவேண்டும்.
பிள்ளைகள் படிப்பதற்கு பாடசாலை இல்லை என்றால் ஒரு இறைமையுள்ள அரசாங்கம் பாடசாலை கட்டிக் கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
அபிவிருத்திகளை அரசாங்கம் செய்துதான் ஆகவேண்டும். மாறாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவர்கள் அரசியல் கட்சிகள் அல்ல, மக்கள் எந்த அரசியல் கட்சியினை ஆட்சியமைத்து அரசாங்கம் அமைக்கின்றார்களோ அந்த அரசாங்கம்தான் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆனால் பல்லினம் வாழுகின்ற ஒரு நாட்டிலே சிறுபான்மை இனம் தாக்கப்படுகின்றபோது சிறுபான்மை இனம் சார்பான அரசியல்வாதிகள் அரசாங்கத்துடன், அவ்வினத்துக்கு ஆதரவான அரசிடம் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
சமமான முறையில் அனைவருக்கும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யுமாக இருந்தால், சிறுபான்மையின மக்களையும் ஏனையோரைப் போல் சமநிலையில் கவனிக்குமாக இருந்தால் இந்த நாட்டிலே ஒரு நாளும் பிரச்சினை தோன்றியிருக்க மாட்டாது.
இந்த நாட்டில் ஏன் இந்த போர் நடைபெற்றது என்றால் இங்கே வாழுகின்ற சிறுபான்மையின மாக்களாகிய தமிழ் மக்களின் அபிலாசைகள் சுதந்திரம் அடைந்ததிலிருந்து தீர்க்கப் படவில்லை என்பதுதான் உண்மை.
இது இப்படி இருக்க இந்த சிறுபான்மை இனத்தின் அபிலாசை அபிவிருத்தி மட்டும்தானா? என்பது கேள்வியாக எழுந்திருக்கின்றது. இன்று சிங்கள மக்களிடம் அபிவிருத்தியினைக் காட்டியதை போன்று தமிழர்களிடத்தில் அபிவிருத்தியினைக் காட்டி ஏமாற்ற முடியாது.
அரசாங்கத்தினால் அல்லது அரசாங்கத்தினை ஆதரிக்கின்ற தமிழ் அரசியல் வாதிகளினால் ஒரு நாளும் தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கச் செய்யமுடியாது.
ஏனென்றால் அவர்கள் அபிலாசைகளை நம்பித்தான் இருக்கின்றார்கள். இவற்றினை தமிழ் மக்கள் பல தேர்தல்களிலே எடுத்துக் காட்டியிருக்கின்றார்கள்.
கடந்த மேல், தென் மாகாணசபைத் தேர்தல்களிலே ஜனாதிபதி அவர்களின் தேர் தல் மாவட்டமாகக் காணப்படுகின்ற அம்பாந்தோட்டையிலே அரசாங்கக் கட்சி பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது, அங்கே அரசாங்கம் செய்யாத அபிவிருத்தியா? ஏன் அவர்கள் பின்தள்ளப்பட்டார்கள்?
கொழும்பு மாநகரப் பகுதியில் அரசாங்கத்தின் வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளன. ஏன் அங்கு அபிவிருத்திகள் நடைபெறவில்லையா?
அம்பாந்தோட்டையிலே சர்வதேச விமான நிலையம், சர்வதேச துறைமுகம், சர்வதேச விளையாட்டு அரங்கு என சர்வதேச தரத்தில் அபிவிருத்திகள் நடைபெற்ற அந்தப் பகுதியில் அரசாங்கம் வாக்குப் பெறுவதில் சற்று பின்னடைவை பெற்றிருக்கின்றது என்று சொன்னால் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலே அபிவிருத்தியினைக் காட்டி அரசாங்கம் எவ்வாறு வாக்குகளைப் பெறலாம் என நாம் கேட்கின்றோம்.
போரினாலே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கம் வீடுகளைக் கொடுத்திருக்கின்றது. அதிலே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2000 வீடுகள், அம்பாறை மாவட்டத்திற்கு 1000 வீடுகள், திருகோணமலை மாவட்டத்திற்கு 1000, வீடுகள் வடமாகாணத்திற்கு 50000 வீடுகளைக் கொடுத்திருக்கின்ற இந்நிலையில் இந்த வீட்டுத்திட்டத்தினையும் நாங்கள் தான் கொண்டு வந்துள்ளோம் என ஒருசில அரசாங்க அடிவருடிகள் கூறித்திரிகின்றார்கள்.
அரசியல் கட்சி சார்ந்த எம்.பிக்கள் இல்லாது விட்டாலும் கூட வீடுகள் பயனாளிகளுக்குக் கொடுக்கப்பட்டே தீரும்.
ஏனென்றால் இவைகளெல்லாம் ஒரு செயற்திட்டத்தின் அடிப்படையில் செய்யப்படுகின்ற வேலைகள் ஆனால் சில அரசியல்வாதிகள் சட்டத்தினை அவர்களது கையிலே எடுக்கின்றார்கள். இது மக்களுக்குத் தெரியாது.
ஆகவே மக்களை ஏமாற்றுகின்ற பேர்வழிகளாக இருக்கின்றார்களே தவிர தமிழர்களின் அபிலாசைகளைப் பெறுவதில் அவர்களுக்கு எதுவித அக்கறையுமே கிடையாது.
அவ்வாறு அக்கறை இருந்திருந்தால் இந்த நாட்டிலே பல விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த விடயங்களை தட்டிக் கேட்கவும் இல்லை தட்டிக்கேட்க அவர்களுக்கு திராணியுமில்லை.
கெவுளியாமடு கிராமத்தில் அத்துமீறிக் குடியேறிய பெரும்பான்மையினைத்தினைப் பற்றி யாரும் தட்டிக்கேட்கவில்லை ஆனால் அவற்றினைத் தட்டிக்கேட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான்.
மண்ணுக்காக போரிட்டவர்கள் எமது தமிழ் மண் பறிபோகின்றபோது பாராமுகமாக இன்று அரசாங்கத்தினை ஆதரித்துக் கொண்டுதான் தமிழ் அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள். ஒரு காலத்திலே தமிழ் மண் பறிபோகக் கூடாது என்பதற்காக போராடியவர்களும் அவர்களேதான்.
அண்மையில் கிழக்கு மாகாண சபையினால் எழுது வினைஞர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆகிய இரண்டு நியமனங்கள் வழங்கிய பொழுது மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அபிவிருத்தி உத்தியோகஸ்தர் பதவிக்கு எவரும் நியமிக்கப் படவில்லை தமிழ் இனத்திற்கு மட்டக்களப்பிலே இப்படி நடைபெற்றிருக்கின்றது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான் தட்டிக்கேட்டது வேறுயாருமில்லை.
இந்த அளவிற்கு தமிழ் இனத்திற்கு சோதனைகள் வேதனைகள் வருகின்ற போது அவற்றினையெல்லாம் தீர்த்து வைக்கின்ற பொறும்பும் கடமையும் உள்ளவர்களாகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் இருக்கின்றோம்.
தமிழர்களின் அபிலாசைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக இன்றும் கூட போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு தடவை அல்ல இரண்டு தடவையல்ல 2014 இல் மூன்றாவது தடவையாகவும் ஜெனிவாவிலே சர்வதேசத்தின் வெற்றியினைப் பெற்றிருக்கின்றோம்.
அரசாங்கம் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்காக ஜெனிவா விசாரணைகளை நிராகரித்திருக்கின்றோம், வர விடமாட்டோம்,என்றெல்லாம் கூறுகின்றார்கள் ஆனால் இவையெல்லாம் சிங்கள மக்களை ஏமாற்றுகின்ற வித்தைகள், உண்மையான பொறியிலே இவர்கள் மாட்டப்பட்டிருக்கின்றார்கள்.
இந்த அரசிடம் சர்வதேச விசாரணை வேண்டும், விசாரணைக்கு வழிவிடுங்கள் என ஐக்கிய நாடுகள் சபை கேட்டிருக்கின்றது.
அவர்களுக்கு வழிசமைத்துக் கொடுக்காது விட்டால் அந்த வேலையினைச் செய்வது எப்படி என்று சர்வதேசத்திற்குத் தெரியும், சென்றமுறை ஏமாற்றியது போல் சர்வதேசத்தை இம்முறை ஏமாற்ற முடியாது.
அந்த அளவிற்கு இன்று சர்வதேசம் ஒரு நல்ல உணர்வுடன் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கு நாங்கள் சர்வதேச ரீதியாக இந்த பிரச்சினையினை கொண்டு சென்றது யார்? இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான்.
வெறும் அபிவிருத்தி, அபிவிருத்தி என்று பாசாங்கு காட்டுகின்ற அரசியல் வாதிகள் இருக்கின்றார்களே தவிர உணர்வுடனும் உரிமையுடனும் போராடுகின்ற சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டும்தான் இருக்கின்றது என பொன். செல்வராசா குறிப்பிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten