[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 02:12.15 PM GMT ]
புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை தாக்கியதாக கூறப்படும் தொழில்நுட்பவியலாளர் ஒருவரும், வர்த்தக நிலையம் ஒன்றின் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜாதிக பல சேனாவிடம் இருந்து எடுத்துச் சென்ற ஆவணங்களை பொதுபல சேனா தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக கொம்பனித் தெரு பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தாம் புலனாய்வுப் பிரிவினர் என்பதற்கான அடையாள அட்டைகளை காண்பித்த போதிலும் சந்தேக நபர்கள் தொடர்ந்தும் அவர்களை தாக்கியதாக தெரியவருகிறது.
இராணுவ வீரரை தாக்கிய பொதுமகன் கைது
இராணுவ வீரர் ஒருவரை தாக்கிய பொதுமகன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் கொழும்பின் புறநகர் மஹரகம பகுதியில் இடம்பெற்றது.
குறித்த பொதுமகன் முகத்தை மறைக்கக் கூடிய மோட்டார் சைக்கிள் ஹெல்மட்டுடன் தனியார் வங்கி ஒன்றின் முன்னால் நின்ற போது அவரை அங்கிருந்து அகலுமாறு இராணுவ வீரர் கேட்டுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட முறுகலின்போதே பொதுமகன் இராணுவ வீரரை தாக்கியுள்ளார்.
அண்மைக்காலமாக முகத்தை மூடிய நிலையில் ஹெல்மட்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பாரிய கொள்ளைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் நகையகங்களுக்கு அருகில் பொலிஸாரும் இராணுவத்தினரும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜாதிக பல சேனாவின் ஆவணங்களை பொலிஸில் ஒப்படைத்த பொதுபல சேனா
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 02:26.35 PM GMT ]
கொழும்பு நிப்போன் ஹோட்டலில் ஜாதிக பல சேனா ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிற்குள் பலவந்தமாக புகுந்து பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உட்பட அந்த அமைப்பினர் குழப்பினர்.
இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடம் மீள வழங்கப்பட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரெக்க விஜித தேரரை அச்சுறுத்திய ஞானசார தேரர் அங்கிருந்த ஆவணங்களை பறித்துச் சென்றதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் தமது ஆவணங்கள் என எண்ணி அவற்றை தாம் எடுத்துச் சென்று விட்டதாக பொதுபல சேனா அமைப்பு கூறியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றபோதே பொலிஸார் இதனை குறிப்பிட்டனர்.
பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், தம்மை அச்சுறுத்தி ஊடக சந்திப்பை குழப்பியதாக விஜித தேரரின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தலுக்கு அஞ்சியே தான் மன்னிப்பு கோரியதாகவும் அவர் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.
இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்: ஆளும்தரப்பு எதிர்த்தரப்பினரிடையே வாதப் பிரதிவாதங்கள்
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 02:55.30 PM GMT ]
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2.30 மணி வரை தொடர்ந்து இடம்பெற்றது.
இதன்போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்தக் கோரிக்கையினை முன்வைத்தனர்.
வலிகாமம் வடக்கிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற விடாமல் இராணுவத்தினர் அம்மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்து வைத்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயமாக பிரகரனப்படுத்தப்பட்டுள்ள ஆறாயிரத்து ஐநூறு ஏக்கர் காணிகளுக்கு சொந்தமான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அவர்களின் காணிகளில் மீளக்குடியேற முடியாமல் உள்ளனர். ஆனால் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து எதுவுமே குறிப்படவில்லை.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை மீள்குடியேற்றம் என்பது முக்கியமாகவுள்ள நிலையில் அந்த விடயத்தை புறக்கணித்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும், வலி வடக்கில் தற்போது காணிகள் துப்புரவு செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். அந்தக் காணிகளில் இடம்பெயரந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவார்களா?
இல்லாவிட்டால் இராணுவத்தினர் முன்பு அறிவித்தது போன்று இராணுவத்தினர் குடும்பங்களுடன் குடியேற்றப்படவுள்ளார்களா? மக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்ததாக விடுத்துள்ள அறிவித்தலை மீளப்பெறுவார்களா என்று கேள்விகளைத் தொடுத்துக் கொண்டு சென்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
இதனையடுத்து தனது முதற்கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்தார். அதாவது, இராணுவத்தினரால் காணிகள் தற்போது துப்புரவு செய்யப்படுகின்றது. இந்தக் காணிகளின் இராணுவத்தினர் குடியேறவுள்ளனரா அல்லது இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற உள்ளனரா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ், அந்தக் காணிகளில் மக்கள் தான் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.மக்களை மீள்குடியேற்றவே காணிகள் துப்புரவு செய்யப்படுகின்றது என்று பதிலளித்தார்.
இதேவேளை அந்தக் கூட்டறிக்கையில் மீள்குடியேற்றம் தொடர்பான விடயம் ஏன் முக்கியப்படுத்தப்படவில்லை என்று கேள்வியெழுப்பினார் சுமந்திரன் எம்பி.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ், இந்தக் கூட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஏனைய விடயங்களுக்குள் மீள்குடியேற்றம் குறித்து ஆராய முன்பு தீர்மானிக்கப்பட்டது என்றார்.
இருப்பினும் இந்தப் பதிலுக்கு சுமந்திரன் எம.;பி உட்பட ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமான விடயம் அதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதனையடுத்து மக்களின் காணிகள் பொதுத் தேவைக்கென சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டால் என்ன என்று சுமந்திரன் எம்பியினால் கேள்வியெழுப்பட்ட போது குறுக்கிட்ட ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்கனவே இந்தவிடயம் தொடர்பாக தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை மக்களின் காணிகள் மக்களிடமே மீண்டும் வழங்கப்படவேண்டும் என்பதில் எமக்குள் மாற்றுக் கருத்தில்லை என்றும் கூறினார்.
இந்த விடயம் குறித்து விவாதம் நீண்டு கொண்டு செல்லும் போது குறுக்கிட்ட வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களினால் ஒருபோதும் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியாது.
இந்த விடயம் குறித்து விவாதம் நீண்டு கொண்டு செல்லும் போது குறுக்கிட்ட வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களினால் ஒருபோதும் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியாது.
எனவே பாராளுமன்றத்தில் அமைச்சரவையில் பத்திரத்தை தாக்கல் செய்து தடுத்து நிறுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், பாராளுமன்றத்தில் ஏற்கனவே இந்த விடயம் குறித்து பல முறை பேசியுள்ளோம். நாம் பத்திரிகைகளுக்காக பேசுவதில்லை. வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விடயங்களின் பிரதிகளை உங்களுக்கு தரமுடியும் என்று கூறனார்.
இவ்வாறு ஆளும் தரப்பிற்கும் எதிர்த் தரப்பிற்கும் இடையில் காணி விவகாரம் குறித்து நீண்டநேரம் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதேவேளை இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் மீள வழங்கி அந்தக் காணிகளிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயரந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten