தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

குடிபோதையில் டிரைவர் இருந்தாரா ? கடற்படை சிப்பாயின் ரக் வண்டி தலைகீழ் !





திருகோணமலை, போடவக்கட்டு மதுரங்குடா 41 ஆவது மைல்கல்லுக்கு அருகில் கடற்படையினரின் டிபென்டர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர் என்று குச்சவேலி பொலிஸார் தெரிவித்தனர். வீதியிலிருந்த குழிக்குள் டயர்கள் விழுந்துவிடாமல் திருப்பியபோதே வாகனம் நடுவீதியிலேயே தலைகீழாக புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். திருகோணமலை டொக்யாட் கடற்படைத்தளத்திலிருந்து திரியாய் வலகம்பா தளத்திற்கு சென்று திருமியிய டிபென்டர் ரக வாகனமே இவ்வாறு தடம் புரண்டது.

6 பேர் பயணித்த இந்த வாகனத்தில் 2வர் இறந்துள்ள நிலையில் மீதமுள்ள 4பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். வாகனத்தை ஓட்டிவந்த சிப்பாய் மதுபோதையில் இருந்தாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள் என மேலும் அறியப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten