தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

பௌத்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தில் பௌத்த அமைப்புகள்!

இனப்பிரச்சினை தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு?
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 10:53.44 AM GMT ]
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எண்ணியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெரிவுக்கு பங்கேற்பதை ஆரம்பத்தில் இருந்து நிராகரித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் காலங்களில் அதில் கலந்து கொள்ள எண்ணியுள்ளதாக தமிழ் அரசியல் கட்சிகளின் தகவல்கள் தெரிவிப்பதாக ஞாயிறு திவயின பத்திரிகை கூறியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் கூட்டத்தில் இது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என அதன் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்கவோ, அரசாங்கத்துடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொள்ள போவதில்லை என கடும் நிலைப்பாட்டில் இருந்து வந்த கூட்டமைப்பு, தென் ஆப்பிரிக்காவின் கோரிக்கைக்கு அமையவே நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் அரசாங்கத்திற்கும், கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிப்பதற்கான தலையீடுகளில் தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேகப் ஜூமா ஈடுபட்டுள்ளார்.
இதனடிப்படையில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா கடந்த பெப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.
அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவுக்கு அழைக்கப்பட்டிருந்ததுடன் அவர்கள் அந்நாட்டின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி சிறில் ராம்போஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளுக்கு சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை காண உதவுமாறு ராம்போஷா, கூட்டமைப்பினரிடம் கூறியிருந்தார்.
இதனிடையே கொழும்பில் அண்மையில் முன்னாள் அமைச்சர் பேர்னாட் சொய்சாவின் நினைவு தின உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கூட்டமைப்பு வரும் காலத்தில் தெரிவுக்குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் என தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழு மே மாதம் முதல் வாரத்தில் மீண்டும் கூடவுள்ளது. அந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்வதற்கான வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிப்பதாகவும் ஞாயிறு திவயின கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjxz.html

பௌத்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தில் பௌத்த அமைப்புகள்!
[ சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2014, 11:44.52 AM GMT ]
பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி, வெளிநாட்டு நிதியுதவியில் நாட்டில் செயற்படும் சில அமைப்புகள் அந்த மதத்தை அழிக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக, ஆலோசகர்கள் சிலர் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்நிய மதத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, அதன் மூலம் பௌத்த மதம் அடிப்படைவாத மதம் என சர்வதேசத்திற்கு காண்பிக்கும் சர்வதேச சதித்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் ஊடாக இலங்கையை அவமதிப்புக்கு உட்படுத்துவதே இந்த சதித்திட்டத்தின் நோக்கம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பௌத்த தர்மத்தை பாதுகாப்பதாக கூறி குரல் கொடுத்துவரும் அமைப்புகளுக்கு வெளிநாட்டு பணம் கிடைக்கும் விதம், நாட்டின் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயற்படும் விதம், இந்த அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ள வெளிநாட்டு அமைப்புகள், ஆலோசனை வழங்கும் தரப்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆலோசகர்கள் அரசாங்கத்திடம் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.
பொதுபல சேனா உட்பட புதிததாக முளைத்துள்ள பௌத்த அமைப்புகளுக்கு சில வெளிநாடுகள் உதவியளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
பொதுபல சேனா அமைப்பு அமெரிக்கா மற்றும் நோர்வே நாடுகளுக்கு விஜயம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyESdLXjx3.html

Geen opmerkingen:

Een reactie posten