தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற போஸ்டர்: விவகாரமானது !


யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற போஸ்டர் ஒட்டிய விவகாரம், பெரிய விவகாரம் ஆகியுள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன் கடந்த 17ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். துண்டுப் பிரசுரம் ஒட்டப்பட்டபோது, அதனை ஒட்டியவர்கள் வந்த மோட்டார் சைக்கிளை பொதுமக்களில் ஒருவர் நன்றாக கவனித்துள்ளார். அதில் உள்ள இலக்கத்தை அவர் உடனடியாக குறித்து பொலிசாரிடம் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, குறித்த அந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான கஜானனை பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இருப்பினும் தன்னோடு கல்விகற்கும் மன்மதராசா வேணுகாந்தன் என்னும் நபரே சம்பவ தினத்தன்று தனது மோட்டார் சைக்கிளை வாங்கிச் சென்றார் என்று கஜானனன் தெரிவிதமையை அடுத்து மன்மதராசா வேணுகாந்தனும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இது இவ்வாறு இருக்க, மன்மதராசா வேணுகாந்தன் என்னும் நபர் சமீபத்தில் தான் சிங்கப்பூரில் இருந்து யாழ் வந்ததாக கூறப்படுகிறது. கைதான வேணுகாந்தன் தான் படித்துக்கொண்டு இருக்கும் டெக் கல்லூரியில், தான் வேலை பார்பதாக உண்மைக்கு புறம்பான தகவலை சி.ஐ.டியிடம் வழங்கியுள்ளார். இதனால் சி.ஐ.டி பிரிவினர் டெக்னிகல் கல்லூரியில் உள்ள ஆசிரியர் ஒருவரையும் கைதுசெய்துள்ளார்கள் என்று அறியப்படுகிறது. தற்சமயம் யாழ் பொலிஸ் நிலையத்தில் உள்ள இம் மூவரையும், வவுனியா கொண்டு சென்று விசாரிக்க இருப்பதாக பொலிசார் மேலும் தெரிவித்துள்ளார்கள். இதேவேளை யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் "தமிழீழம் மலரும்" என்ற போஸ்டர் உண்மையாகவே ஒட்டப்பட்டதா என்று கூட தமக்கு தெரியவில்லை என்று அங்கு வசிக்கும் அயலவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் இதனை விட்டபாடாக இல்லை. டெக்னிகல் காலேஜ் சென்ற பொலிசார் அங்குள்ள கம்பியூட்டர்களை கொண்டுசென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten