வவுனியா பஸ் நிலையப் பகுதியில் இயங்கிய வர்த்தக நிலையம் ஒன்று பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கடந்த புதன்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு வேலை செய்தவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. நெடுங்கேணியில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் தேவிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக வவுனியா பஸ் நிலைய மேல்மாடியில் உள்ள டாட்டா ஸ்போட்ஸ் என்ற விளையாட்டு உபகரண விற்பனை நிலையம் கடந்த புதன் ழமை முதல் சீல் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடை முன்பகுதியில் பொலிசாரும் புலனாய்வுப் பிரிவினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலைய உரிமையாளர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, அங்கு பணியாற்றிய பண்டாரிகுளத்தைச் சேர்ந்த தில்லையன் தீபாகரன் (வயது 22) விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, குறித்த கடை உரிமையாளரே, தேவிகன் வசித்து வந்த வீட்டைக் கட்டுவதற்கு உதவியதாகவும் அதன் அடிப்படையிலேயே விசாரணை இடம்பெறுவதாகவும் தெரியவருகிறது. |
20 Apr 2014 http://www.lankaroad.net/index.php?subaction=showfull&id=1397979895&archive=&start_from=&ucat=1& |
தொலைக்காட்சி
தொலைக்காட்சி
zondag 20 april 2014
தேவிகனிற்கு உதவியவரின் கடைக்குச் சீல்! உரிமையாளர் தப்பியோட்டம்!!
Abonneren op:
Reacties posten (Atom)
Geen opmerkingen:
Een reactie posten