பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை! எமது நாட்டில் மாற்றம் தேவை: மன்னார் ஆயர்
உண்மை இல்லாத பொய் உள்ள இடத்தில் உண்மையான அமைதி பிறக்காது. நீதி இல்லாத இடத்திலும் அவ்வாறான குழப்பமான சூழ்நிலை ஏற்படும். உண்மை ஏற்கப்பட்டு நடந்த விடையங்களுக்கு எல்லாம் பொறுப்பு கூறப்படும் பட்சத்திலே உண்மையான சாமதானம் பிறக்கும். நல்லிணக்கம் ஏற்படும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ‘ஒற்றுமை, நல்லிணக்கம் தொடர்பில் பேசிக் கொண்டிருப்பதில் எவ்வித பலனும் இல்லை. எமது நாட்டிற்கு மாற்றம் தேவை. அதனை உலக நாடுகள் அறிந்திருக்கின்றது. ஆனால் எமக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த நாடுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். எனினும் அவற்றை எமது நாடு ஏற்றுக்கொள்ளுவதாக இல்லை. இதனால் பல ஆண்டுகளுக்கு பின் நீதி இல்லாமல், உண்மை இல்லாமல் சமாதானம் இன்றி தவித்த மக்களாக எமது இலங்கை நாட்டு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை நீதியுடன் கூடிய சமாதானமான இந்த செல்வத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
வீதி அமைக்கப்படலாம், கட்டிடங்கள் கட்டப்படலாம் அவை அல்ல எங்களுக்குத்தேவை. எங்களுக்கு உண்மையான தேவை உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லாம் உண்மையான சமாதானத்துடன், ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே. கவலைகள்,கஸ்டங்கள்,வருமைகள் இருக்கலாம்.ஆனால் உண்மையான நீதியுடன் கூடிய சமாதானமே இந்த தவித்த மக்களுக்குத்தேவை.
1920 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இப்படியான ஒரு போராட்டம் இடம் பெற்று வருகின்றது. இதற்கு ஒரு உரிய பதிலை கொடுப்பதற்காக இந்த நாடுகள் எங்களுடன் சேர்நது குரல் கொடுத்து வருகின்றன.
சமாதனம் என்பது கடவுளின் உண்மையான கொடை.இந்த நாட்டின் சமாதானத்திற்காகவும், எங்களுக்காகவும் கேட்கப்படுகின்ற இந்த மன்றாட்டுக்கள் நிறைவேற்றப்பட வேண்டும். என மன்னார் ஆயர் தனது உரையில் தெரிவித்தார். இதே வேளை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்காகவும், குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளுக்காகவும் திருப்பலி ஒப்புக்ககொடுக்கப்பட்டது.
இரணைமடு உண்ணாவிரதப் போராட்டம்! உறுதிமொழியையடுத்து கைவிடப்பட்டது
இந்நிலையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா மற்றும் தமிழ்த் தேசிய மக்கன் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் சந்தித்தனர்.
இதன்போது, உங்களின் கோரிக்கைகள் பெற்றுத் தர நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்தனர். இதனையடுத்து விவசாயிகளின் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் 11.30 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தில் தமது கோரிக்கைகளினைப் புறந்தள்ளி கிளிநொச்சி மக்களையும் யாழ்ப்பாண மக்களையும் முரண்படவைக்கும் செயற்பாடுகளில் நீர்வழங்கல் அதிகார சபை ஈடுபட்டு வருகின்றது என்று தெரிவித்தே இந்த அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர்.
இந்தப் போராட்டத்தில் இரணைமடுக் குளத்தினைச் சார்ந்த 22 உப-பிரிவு விவசாய அமைப்புக்கள் ஈடுபட்டன.
இதன்போது, கருத்துத் தெரிவித்த விவசாயிகள்
‘இரணைமடு நீர் வரி இடாப்பு 1990 ஆம் ஆண்டுக்கு முன்னர் தயாரித்ததே தற்போது பாவனையில் உள்ளது. இதில் பரந்தன் குமரபுரம், கண்டாவளைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் 15000 ஏக்கர் நெற்செய்கை உள்ளடக்கப்படவில்லை. இருந்தும் இவை இரணைமடுக் குளத்திற்கு கீழேயே விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு சென்றால் மட்டுமே இரணைமடுக்குளம் புனரமைக்கப்படும் இல்லாதுவிடின் அந்தத் திட்டம் முன்னெடுக்கப்படாதென நீர் வழங்கல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
அத்துடன், கிளிநொச்சி விவசாயிகளின் கோரிக்கை மறுக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்டு வருகின்றது. இரணைமடுக் குளம், அதனுடன் தொடர்புபட்ட வாய்க்கால்கள், வடிகால்கள் புனரமைக்கப்படவேண்டும் என்ற பல கோரிக்கைகளினை நாங்கள் முன்வைத்தோம்.
இருந்தும் அதற்குப் பதில் எதுவும் தராமல் கிளிநொச்சி விவசாயிகள் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லவதற்குத் தடைசெய்கின்றனர் என்ற பொய்யான பிரச்சாரம் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. இது எம்மீது பழிசுமத்தும் வேலையாகும்.
இருந்தும் அதற்குப் பதில் எதுவும் தராமல் கிளிநொச்சி விவசாயிகள் யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு செல்லவதற்குத் தடைசெய்கின்றனர் என்ற பொய்யான பிரச்சாரம் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றது. இது எம்மீது பழிசுமத்தும் வேலையாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 20000 விவசாயக் குடும்பங்கள் இருக்கின்றனர். இவர்களில் 10000 குடும்பங்கள் 2013 வறட்சி மற்றும் 2012 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஆகியவற்றினால் வங்கிக் கடனாளிகளாகவிருக்கின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்யும் அளவிற்குக் கூடச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தனர்.
எமது கோரிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட பின்னர் இரணைமடுத்திட்டத்தினைச் செயற்படுத்த வேண்டும். எமது கோரிக்கைகள் மறுக்கப்படவோ மறைக்கப்படவோ முடியாது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
யாழ். மல்லாகத்தில் இளைஞர்கள் மீது தாக்குதல்
சனிக்கிழமை (19) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் ஊரெழு பொக்கனையைச் சேர்ந்த இந்திரகுமார் கஜீபன் (வயது 19), சின்னராசா கௌதமன் (வயது 21), ஜெயசீலன் மயூரன் (வயது 21) ஆகிய மூவருமே படுகாயமடைந்தனர்.
தெல்லிப்பழை பொலிஸாரும் தெல்லிப்பழை பிரதேச செயலகமும் இணைந்து சித்திரைப் புத்தாண்டு இசை நிகழ்ச்சியை மல்லாகம் மகா வித்தியாலய மைதானத்தில் சனிக்கிழமை (19) நடத்தியது. இதன்போது, இரு குழுவினருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே இத்தாக்குதலுக்கு காரணமென்று ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும்; பொலிஸார் கூறினர்.
இதேவேளை, யாழ். மல்லாகம் பகுதியில் சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த தவனேஸ்வரன் நிருபன் (வயது 30) என்ற இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டில் படுகாயமடைந்த அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை (19) நள்ளிரவு இந்த இளைஞர் வீதியால் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் இந்த வாள்வெட்டை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten