[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 10:58.37 AM GMT ]
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் மேற்கொண்டுள்ளது.
அம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேர்ந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன்.
அத்துடன் அம்பாந்தோட்டை பிரதேசம் என்பது இன்னும் மீட்கப்படாத பிரதேசம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமை வகிக்கும் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவமானது முழு நாடாளுமன்றத்திற்கும் ஏற்பட்ட அவமானம் எனவும் கரு ஜயசூரிய குறிப்பிட்டார்.
விசாரணைகளைக் குழப்பும் முயற்சிகள் பலிக்குமா?
[ ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2014, 11:37.25 AM GMT ]
இதற்கென துறைசார் நிபுணர்களைத் தெரிவு செய்யும், அவர்களுக்கான வசதிகளைச் செய்து கொடுக்கும், ஏனைய விசாரணை நெறிமுறைகளை வகுக்கும் பணிகளில் நவநீதம்பிள்ளையின் பணியகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அடுத்த மாதம் நடுப்பகுதிக்குப் பின்னதாக அல்லது யூன் மாத ஆரம்பத்தில் இந்த விசாரணைக்குழு செயற்படத் தொடங்கும் என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஐநா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரையில், பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த விசாரணை விவகாரம் தற்போது சற்று அடங்கிப் போயுள்ளது.
சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்படும் வரையில், இந்த தேக்கநிலை தொடரவே செய்யும்.
அதேவேளை ஐநா மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்படும் இந்த விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று அரசாங்கம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, ஐநா விசாரணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பது தேசத் துரோகம் என்றும், அவ்வாறு சாட்சியமளிப்பவர்கள் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர்கள் மிரட்டி வருகின்றனர்.
அதாவது ஐநாவின் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் விடுவதுடன் அரசாங்கம் நின்றுகொள்ளப் போவதில்லை. அத்தகைய விசாரணைகளைக் குழப்பும் நடவடிக்கையிலும் ஈடுபடவுள்ளது என்பதையே இந்த அறிவிப்புகள் வெளிக்காட்டுகின்றன.
இத்தகைய குழப்பும் முயற்சிகளில் ஒன்று தான், புலம்பெயர் அமைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடை.
அதற்கடுத்த முயற்சி தான், ஐநா விசாரணைக்குழுவை இலங்கைக்குள் கால்வைக்க இடமளிக்க மாட்டோம் என்ற அறிவிப்பு. மூன்றாவது குழப்ப முயற்சி, எவரேனும் சாட்சியமளித்தால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற மிரட்டல்.
இவற்றுடன் மட்டும் அரசாங்கம் தமது குழப்ப முயற்சிகளை நிறுத்திக் கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது.
சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்த விசாரணைக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும்.
வெறுமனே அரசாங்கத்தின் ஒத்துழைப்பை வழங்காமல் மட்டும் நின்று கொண்டால், ஐநா விசாரணைக் குழுவுக்கு ஓரளவுக்குச் சாதகமாக இருக்கும் .
அதையும் தாண்டி விசாரணைகளைக் குழப்பவும் அதற்குத் தடை விதிக்கவும் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டால், அது விசாரணைகளுக்கு கணிசமான பின்னடைவுகளை ஏற்படுத்தவே செய்யும்.
இன்றைய சூழலில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு இலங்கைக்குள் வராமலேயே சாட்சியங்களைப் பதிவு செய்யும் வசதிகள் இருந்தாலும், அத்தகைய தொழில் நுட்ப வசதிகளைத் தடுப்பதற்கும் கூட அரசாங்கம் முயற்சிக்கலாம்.
எனவே, ஐநா விசாரணைக் குழுவின் விசாரணைகள் கடுமையான சவால்களுக்கு மத்தியிலேயே மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்படும்.
அதேவேளை, புலம்பெயர் அமைப்புகள் செயற்பாட்டாளர்களின் மீது இலங்கை அரசாங்கம் குத்தியுள்ள பயங்கரவாத முத்திரையும், ஐநா விசாரணைகளுக்கு முக்கியமான பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர் பேரவை உள்ளிட்ட இலங்கை அரசினால் பயங்கரவாதத்துக்கு நிதியளிக்கும் அமைப்புகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள அமைப்புகள் போர்க்குற்ற ஆதாரங்களையும், சாட்சியங்களையும் திரட்டும் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவை.
சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரங்கள் பலவும் இந்த அமைப்புகள் மூலம் தான் பெறப்பட்டிருந்தன.
இந்த அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஐநா விசாரணையின் போது இவற்றினால் சாட்சியங்களை அளிக்க முடியுமா அல்லது தம்மிடமுள்ள ஆதாரங்களை அவற்றினால் வெளிப்படுத்த முடியுமா என்ற கேள்வி உள்ளது.
அது சட்டரீதியாக செல்லுபடியானதா என்று கூட இலங்கை அரசு கேள்வி எழுப்பலாம்.
அதுமட்டுமன்றி, போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தவர்கள் கூட புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ளனர்.
அவர்களை சாட்சியமளிப்பதிலும், அவர்களை சாட்சியமளிக்க வைப்பதிலும், இந்த தடை கணிசமான பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற சாட்சிகள் கூட, இந்த விசாரணையில் சாட்சியமளித்தால் தாமும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படக் கூடும் என்று அஞ்சுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
அத்தகைய புறநிலையானது, சுதந்திரமான சாட்சியப்படுத்தல்களை உறுதி செய்யாது.
இது முழுமையான சாட்சியங்களைத் திரட்டுவதற்கு ஐநா விசாரணைக் குழுவுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்தக் கூடும்.
அதேவேளை, ஐநா விசாரணைக் குழுவின் முன்பாக, இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சாட்சியமளிக்க முன்னாள் படை அதிகாரிகள் சிலர் முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது அரசாங்கத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒன்றாகவே இருக்கும்.
ஏனென்றால், போர் முடிவுக்கு வந்த பின்னர் அரசாங்கத்துக்கு விசுவாசமான அதிகாரிகளை முன்னிலைப்படுத்துவதற்காகவும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவான அதிகாரிகளை ஓரம் கட்டுவதற்காகவும் இராணுவ உயர் மட்டத்தில் பெரியளவிலான களையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பெருமளவு உயர் அதிகாரிகள் அதுவும் போரில் முக்கிய பங்கெடுத்த அதிகாரிகள் கூட, படையிலிருந்து சுயமாகவோ வற்புறுத்தலின் பேரிலோ விலக நேரிட்டது.
அவர்களில் பலரும் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளில் அடைக்கலம் தேடியுள்ள இத்தகைய அதிகாரிகள் பலரும் போர்க்குற்றங்கள் குறித்து சாட்சியமளிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே சில அதிகாரிகள் அமெரிக்க அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் இது பற்றிய தகவல்கள் வெளியாகியும் இருந்தன.
இவர்களையும் ஐநா விசாரணைக் குழு முன்பாக நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.
அவ்வாறு அரசுக்கு எதிராக படை அதிகாரிகள் சாட்சிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டால், அது அரசாங்கத்துக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் என்பதில் ஐயமில்லை.
ஆனால் போர்க்குற்ற விவகாரங்களில் படையினர் ஈடுபடவேயில்லை என்று கூறும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, குற்றச்சாட்டுக்கள் எதற்கும் பதிலளிக்கத் தாம் தயாராகவே இருப்பதாகக் கூறி வருகிறார்.
அரசாங்கத்துக்கு எதிராக படை அதிகாரிகள் சாட்சியமளித்தால், சரத் பொன்சேகாவைக் கொண்டு அவற்றுக்குப் பதிலளிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை அரசாங்கம் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
சரத் பொன்சேகா படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்று கூறினாலும், அரசாங்கத்தைக் காப்பாற்றத் தாம் தயாரில்லை என்று கூறிவருபவர்.
ஒருவேளை படையினரைக் காப்பாற்ற அவர் களமிறங்கினாலும், அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்காக அவர் வக்காளத்து வாங்க முனையமாட்டார் என்றும் கருதப்படுகிறது.
இந்தநிலையில் ஐநா விசாரணைகளுக்கு தடைகளையும், தடங்கல்களையும் ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டாலும், இந்த விசாரணைகள் அரசாங்கத்துக்குப் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தப் போவது என்னமோ உண்மைதான்.
எனவே, ஐநா விசாரணைக்குழு அமைக்கப்பட்டவுடன், இந்த விவகாரம் இன்னும் இன்னும் சூடுபிடிக்கும்.
புதிய புதிய வியூகங்கள் வகுக்கப்படும், உத்திகள் வரையப்படும். அவையெல்லாமே குற்றச்சாட்டுகளி்ல் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கானதாகவே இருக்குமே தவிர, படையினரைப் பாதுகாப்பதற்கானதாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஹரிகரன்
Geen opmerkingen:
Een reactie posten