சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இதுவரையில் உத்தியோகபூர்வமான கோரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.
2002ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டால் உரிய பதிலளிக்கப்படும் எனவும், சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளது. தீர்மானம் சர்வதேச சட்ட மீறல் மட்டுமன்றி சர்வதேச விவகாரங்களில் அபாயகரமான சூழ்நிலையை உருவாக்கும் என சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/66122.html
Geen opmerkingen:
Een reactie posten