தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்: ஆளும்தரப்பு எதிர்த்தரப்பினரிடையே வாதப் பிரதிவாதங்கள்

தாக்குதலால் உயிரிழந்த நபர்: கொதித்தெழுந்த ஊர்மக்கள்

மட்டக்களப்பு, ஆரையம்பதி பிரதேசத்தில் கடந்த 15 திகதி இரவு தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், உயிரிழந்ததை தொடர்ந்து, தாக்குதல் நடத்தியோரின் வீடுகள் மீது இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 15ஆம் திகதி இரவு ஆரையம்பதி திருநீற்றுகேணி கிழக்கை சேர்ந்த கிருஷ்ணகுமார் பிரகாஷ் (வயது 26) என்ற இளம் குடும்பஸ்தர், கடைக்கு சென்று வீடு திரும்பும் வழியில் சிலர் பொல்லுகளால் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த அவரை, ஊர் மக்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்து, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்திய சாலையில் சேர்த்துள்ளனர்.
எனினும், இவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளனதால் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சைக்குப் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார். தற்போது இவரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைியல், உயிரிழந்தவர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தலை மறைவனதால் ஆத்திரமுற்ற மக்கள் அவர்களின் வீடுகளை தாக்கி சேதப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்விரோதம் காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
https://www.facebook.com/thavady/media_set?set=a.10152135210284482.1073741946.747979481&type=3&uploaded=8

இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீள ஒப்படைக்கப்பட வேண்டும்: ஆளும்தரப்பு எதிர்த்தரப்பினரிடையே வாதப் பிரதிவாதங்கள்
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 02:55.30 PM GMT ]
இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடம் மீள வழங்கப்பட்டு மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 2.30 மணி வரை தொடர்ந்து இடம்பெற்றது.
இதன்போதே கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து இந்தக் கோரிக்கையினை முன்வைத்தனர்.
வலிகாமம் வடக்கிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற விடாமல் இராணுவத்தினர் அம்மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரித்து வைத்துள்ளனர்.
உயர் பாதுகாப்பு வலயமாக பிரகரனப்படுத்தப்பட்டுள்ள ஆறாயிரத்து ஐநூறு  ஏக்கர் காணிகளுக்கு சொந்தமான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் அவர்களின் காணிகளில் மீளக்குடியேற முடியாமல் உள்ளனர்.  ஆனால் இந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்து எதுவுமே குறிப்படவில்லை.
வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை மீள்குடியேற்றம் என்பது முக்கியமாகவுள்ள நிலையில் அந்த விடயத்தை புறக்கணித்ததற்கான காரணம் என்ன என்பது தொடர்பாகவும், வலி வடக்கில் தற்போது காணிகள் துப்புரவு செய்யப்படுவதாக கேள்விப்பட்டேன். அந்தக் காணிகளில் இடம்பெயரந்த மக்கள் மீள்குடியேற்றப்படுவார்களா?
இல்லாவிட்டால் இராணுவத்தினர் முன்பு அறிவித்தது போன்று இராணுவத்தினர் குடும்பங்களுடன் குடியேற்றப்படவுள்ளார்களா?  மக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்ததாக விடுத்துள்ள அறிவித்தலை மீளப்பெறுவார்களா என்று கேள்விகளைத் தொடுத்துக் கொண்டு சென்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.
இதனையடுத்து தனது முதற்கேள்வியை நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்தார். அதாவது, இராணுவத்தினரால் காணிகள் தற்போது துப்புரவு செய்யப்படுகின்றது. இந்தக் காணிகளின் இராணுவத்தினர் குடியேறவுள்ளனரா அல்லது இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற உள்ளனரா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ், அந்தக் காணிகளில் மக்கள் தான் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.மக்களை மீள்குடியேற்றவே காணிகள் துப்புரவு செய்யப்படுகின்றது என்று பதிலளித்தார்.
இதேவேளை அந்தக் கூட்டறிக்கையில் மீள்குடியேற்றம் தொடர்பான விடயம் ஏன் முக்கியப்படுத்தப்படவில்லை என்று கேள்வியெழுப்பினார் சுமந்திரன் எம்பி.
இதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ், இந்தக் கூட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு ஏனைய விடயங்களுக்குள் மீள்குடியேற்றம் குறித்து ஆராய முன்பு தீர்மானிக்கப்பட்டது என்றார்.
இருப்பினும் இந்தப் பதிலுக்கு சுமந்திரன் எம.;பி உட்பட ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு மக்களின் மீள்குடியேற்றம் முக்கியமான விடயம் அதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதனையடுத்து மக்களின் காணிகள் பொதுத் தேவைக்கென சுவீகரிக்கப்படுவதை தடுத்து நிறுத்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டால் என்ன என்று சுமந்திரன் எம்பியினால் கேள்வியெழுப்பட்ட போது குறுக்கிட்ட ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்கனவே இந்தவிடயம் தொடர்பாக தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை மக்களின் காணிகள் மக்களிடமே மீண்டும் வழங்கப்படவேண்டும் என்பதில் எமக்குள் மாற்றுக் கருத்தில்லை என்றும் கூறினார்.

இந்த விடயம் குறித்து விவாதம் நீண்டு கொண்டு செல்லும் போது குறுக்கிட்ட வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களினால் ஒருபோதும் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்த முடியாது.
எனவே பாராளுமன்றத்தில் அமைச்சரவையில் பத்திரத்தை தாக்கல் செய்து தடுத்து நிறுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இதன்போது கருத்து தெரிவித்த ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், பாராளுமன்றத்தில் ஏற்கனவே இந்த விடயம் குறித்து பல முறை பேசியுள்ளோம். நாம் பத்திரிகைகளுக்காக பேசுவதில்லை. வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் பேசப்பட்ட விடயங்களின் பிரதிகளை உங்களுக்கு தரமுடியும் என்று கூறனார்.
இவ்வாறு ஆளும் தரப்பிற்கும் எதிர்த் தரப்பிற்கும் இடையில் காணி விவகாரம் குறித்து நீண்டநேரம் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதேவேளை இராணுவத்தினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை பொதுமக்களிடம் மீள வழங்கி அந்தக் காணிகளிலிருந்து யுத்தம் காரணமாக இடம்பெயரந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஒருமித்த குரலில் வேண்டுகோள் விடுக்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyERVLXho3.html

Geen opmerkingen:

Een reactie posten