தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 21 april 2014

யாழ்ப்பாணம் முழுமையாக அபிவிருத்தியடைவில்லை!- மலேசியா !

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணம் என்பன இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையவில்லை என மலேசிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
போருக்கு பின்னர் மலேசியாவுக்கு மகத்தான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாடு கூறியுள்ளது.
2009 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற 30 வருடகால உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதை உறுதியாக்கியுள்ளது என இலங்கைக்கான மலேசிய தூதுவர் அஷ்மி சைமுதீன் குறிப்பிட்டுள்ளார்.
போர் நடைபெற்ற காலத்திலேயே மலேசிய நிறுவனங்கள் தொலைத் தொடர்பு மற்றும் உட்கட்மைப்பு வசதிகளில் முதலீடுகளை செய்திருந்தன.
தற்போது மேலும் அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதுடன் அதனை மலேசிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இலங்கையில் ஹோட்டல் துறை வளர்ச்சியடைந்து வருகிறது.
கொழும்பில் அதிகளவில் ஹோட்டல்களை நிர்மாணிக்கும் பணிகள் உள்ளன. இந்த துறையில் அதிகளவான வாய்ப்புகள் உள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாண இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையாத நிலையில், மலேசியாவுக்கு மகத்தான வாய்ப்புகள் உள்ளன.
மலேசியாவுக்கும் இலங்கைக்கும் நல்ல இருத்தரப்பு உறவுகள் காணப்படுகின்றன.
இலங்கையில் இருந்து கடந்த வருடம் 64 ஆயிரத்து 51 பேர் மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு 62 ஆயிரத்து 821 பேர் மலேசியாவுக்கு விஜயம் செய்துள்ளதுடன் அந்த எண்ணிக்கை இரண்டு வீதமாக உயர்ந்துள்ளது.
இந்த வருடம் 70 ஆயிரம் இலங்கை சுற்றுலாப் பயணிகள் மலேசியாவுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மலேசியாவை சேர்ந்த தனியார் நிறுவனங்கள் இலங்கையில் 1.5 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyERVLXiw4.html

Geen opmerkingen:

Een reactie posten