[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 09:58.56 AM GMT ]
போர் நடைபெற்ற காலத்தில் விசேட பிரதிநிதியாக செயற்பட்ட போது விடுதலைப் புலிகளுடன் பல்வேறு தொடர்புகளை கொண்டிருந்தாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பிரபாகரனிடம் பல செய்திகளை தெரிவிக்குமாறு மகிந்த என்னிடம் கேட்டார். அவர் உட்பட அனைவரும் அதனை அறிந்திருந்தனர் என சொல்ஹெய்ம் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.
இலங்கையின் சமாதான நடவடிக்கைகளில் நோர்வேயின் பங்கு எவ்வாறு அமைந்திருந்தது என்பதை விளக்கும் புத்தகம் ஒன்று அடுத்த வருடம் வெளியிடப்பட உள்ளது.
அதில் மகிந்த ராஜபக்ச வழங்கிய செய்திகளை நோர்வே எவ்வாறு விடுதலைப் புலிகளிடம் சேர்த்தது உள்ளிட்ட தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் சமாதான செயற்பாடுகளின் அனுசரணையாளராக செயற்பட்ட சொல்ஹெய்ம், விடுதலைப் புலிகளின் தலைமை, ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம், சந்திரிக்கா பண்டாரநாயக்க தலைமையிலான சுதந்திரக் கட்சியின் அரசாங்கம், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆகியவற்றுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தியிருந்தார்.
எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே அரசு என்பன விடுதலைப் புலிகளுக்கு தேவையான வகையில் செயற்படுவதாக குற்றம் சுமத்தியிருந்த சில அரசியல் கட்சிகள், இலங்கையில் செயற்பாடுகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyERVLXiw6.html
மோடி பிரதமரானால் ராஜபக்ச மீது விசாரணை கமிஷன்! வைகோ தகவல்
[ திங்கட்கிழமை, 21 ஏப்ரல் 2014, 10:41.39 AM GMT ]
சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
மேலும், ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க சில கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகவும், அந்த கட்சிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyERVLXiw7.html
Geen opmerkingen:
Een reactie posten