தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 17 april 2014

கோபியுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி 65 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் !

முன்னர் தேடப்பட்டு வந்தவரும், பின்னர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நபரான கோபியுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி சுமார் 65 பேரை இலங்கை புலனாய்வுத்துறையினர் கைதுசெய்துள்ளார்கள் என அறியப்படுகிறது. கடந்த வாரம் கோபி உட்பட மேலும் ஒருவர் நெடுங்கேணியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று இராணுவம் அறிவித்தது. இதன் காரணமாக சுமார் 18 பேர் விடுதலையானார்கள் என்றும் மீடியாக்களில் செய்தி வெளியாகி இருந்தது. இருப்பினும் தாம் 9 பேரை மட்டுமே தற்போது விடுதலை செய்துள்ளதாக , இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

அது மட்டுமல்லாது இதுதொடர்பாக சுமார் 65 பேர் இன்னும் தடுப்பு காகவலில் உள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளஎ அஜித் றோகன மேலும் தெரிவித்துள்ளார். இவர்கள் எப்போது விடுதலையாவர்கள் என்பது தொடர்பாக அவர் கருத்து எதனையும் வெளியிடவில்லை. பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இந்த 65 பேரிடமும் விசாரணை நடத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6690

Geen opmerkingen:

Een reactie posten