தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 17 april 2014

இலங்கைக்கு ஆப்பு வைக்க தவறிய கரூன்: மேலும் தமிழர்களை ஏமாற்றியுள்ளார் !

பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு இன்றைய தினம்(17), தமது நாட்டு பிரஜைகளுக்கான பயண அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் "இலங்கை தற்போது பிரச்சனை அற்ற ஒரு நாடு" என்று தெரிவித்துள்ளது. பிரித்தானியப் பிரஜைகள் தாராளமாக அங்கே சென்றுவரலாம் என்று அது மேலும் அறிவித்துள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) மற்றும் உலகத் தமிழர் பேரவை(GTF) ஆகிய அமைப்புகளை இலங்கை அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் இட்டுள்ளது என்ற விடையத்தையும் பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. ஆனால் இலங்கை செல்வது ஆபத்தான விடையம் என்பதனை அது சுட்டிக்காட்டவில்லை. இலங்கையில் கடன் அட்டையைப் பாவிப்பது, இலங்கை செல்லும் வேளை அரசியல் கூட்டங்களில் கலந்துகொள்ளாமல் தவிர்பது நல்லது என்று மட்டுமே பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. 

ஆக மொத்தத்தில் பல பிரித்தானிய தமிழ் அரசியல் செயல்பாட்டாளர்களை இலங்கை அரசு பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளதை பிரித்தானிய அரசு கண்டிக்க தயாராக இல்லை. அதுபோக பிரித்தானியாவில் முறையாகப் பதிவுசெய்யப்பட்டு அரசியலில் ஈடுபட்டு வரும் அமைப்புகளை இலங்கை அரசு தடைசெய்திருப்பதை டேவிட் கமரூன், கண்டிக்க தயாராக இல்லை. ஆனால் தேர்தல் என்று மட்டும் வந்தால் தமிழர்களின் 3 லட்சம் வாக்குகள் மட்டும் அவருக்கு தேவையாக இருக்கும். இலங்கை ஒரு பாதுகாப்பான நாடு என்பதுபோல, பிரித்தானிய அரசு தனது பிரஜைகளுக்கு பிரயாண அறிக்கையை வெளியிட்டுள்ளது, தமிழர்களை மேலும் அதிர்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 2011ம் ஆண்டு பிரித்தானியப் பிரஜை, ஒருவர் தங்காலையில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டார்.

அவரது ரஷ்யக் காதலியை சிங்களவர்கள் கற்பழித்தார்கள். 2012ம் ஆண்டு ஜேர்மன் நாட்டு பெண் கற்பழிக்கப்பட்டார். பின்னர் பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. நூற்றுக்கணக்கில் தமிழர்கள் காணமல்போயுள்ளார்கள். இவை அனைத்தையும் தற்போது உள்ள பிரித்தானிய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. பிரித்தானிய அரசு கடுமையான பிரயாண அறிவிப்பை வெளியிட்டிருந்தால், பல பிரித்தானியர்கள் இலங்கை செல்வதை தவிர்த்து இருப்பார்கள். இதனால் இலங்கைக்கு பாரிய அன்னியச் செலாவணி கிடைப்பது தடைப்பட்டிருக்கும். அது மேற்கு உலகம் சொல்வதை செவிமடுத்து இருக்கும். ஆனால் பிரித்தானியா போன்ற நாடுகள், இரட்டை முகத்தை வைத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறது. 

நடைபெறவுள்ள தேர்தலில், பிரித்தானிய தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீர்கமாக தமக்கு ஆதரவு தரும் லேபர் கட்சிக்கே வாக்குகளை நிச்சயம் போடுவார்கள் என்றும், தற்போது ஆட்சியில் உள்ள கான்சர்வேட்டிவ் கட்சியை நிச்சயம் புறந்தள்ளுவார்கள் என்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் அதிர்வு இணையத்திற்கு எதிர்வு கூறியுள்ளார்கள்.


http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6693

Geen opmerkingen:

Een reactie posten