தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 17 april 2014

சனல் 4 கின் ஆவணப்படத்தை காட்டாமல் தடுத்தமைக்கு நன்றி: கோட்டபாயவின் நண்பர் !

புலிகளை பிடிக்க உதவிய மலேசியாவுக்கு கோட்டபாய நேரில் சென்று பாராட்டு !
17 April, 2014 by admin

நேற்றைய தினம்(புதன்) மலேசியாவுக்கு விஜயம் செய்த இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, மலேசிய பிரதமரை சந்தித்து சுமார் 40 நிமிடம் உரையாடியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. மலேசியாவில் நடைபெறும், நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளச் சென்ற கோட்டபாய, மலேசியப் பிரதமரை சந்தித்து, புலிகளின் முன் நாள் முக்கியஸ்தர் நந்தகோபனை இலங்கைக்கு நாடு கடத்த சம்மதித்தது தொடர்பாக தமது நன்றியை தெரிவித்துள்ளார். மலேசியாவில் விடுதலைப் புலிகளை ஒடுக்கவும், மேலும் அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த மலேசிய அரசு இலங்கைக்கு பெரும் உதவிகளை செய்து வருவதாக கோட்டபாய மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்காக தாம் நன்றி தெரிவித்துள்ளதாக கோட்டபாய ராஜபக்ஷ, வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டுள்ளதோடு செய்தியாகவும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6688
சனல் 4 கின் ஆவணப்படத்தை காட்டாமல் தடுத்தமைக்கு நன்றி: கோட்டபாயவின் நண்பர் !
17 April, 2014 by admin
கடந்த வருடம் சனல் 4 தயாரித்த கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட காலம் மக் ரே அவர்கள் முயற்சி செய்தார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள, பல்கலைக் கழகம் ஒன்றில் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை திரையிட முற்பட்டவேளை, மலேசியப் பொலிசார் குறுக்கிட்டு அதனை தடுத்தார்கள். தயாரிப்பாளர் காலம் மக் ரே அவர்களை கைதுசெய்யவும் முற்பட்டார்கள். இதனையடுத்து காலம் மக் ரே அவர்கள் மலேசியாவை விட்டு அவசரமாக வெளியேறி இருந்தார். அன்றைய தினம் இலங்கை துணைத்தூதரகம் தெரிவித்த முறைப்பாட்டை அடுத்தே மலேசியப் பொலிசார் இதனைக் குழப்பினார்கள் என்று பல தமிழர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் அது உண்மை கிடையாது. இலங்கை பாதுகாப்பு செயலாளட் கோட்டபாய ராஜபக்ஷ, மலேசியப் பிரதமரை நேரடியாக தொடர்புகொண்டு தான் இத்தகவலை தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் தான் பொலிசார் சென்று கொலைக்களங்கள் ஆவணத்திரைப்படம் காட்டப்படுவதை தடுத்து நிறுத்தியுள்ளார்கள். நேற்றைய தினம் மலேசியா சென்ற கோட்டபாய, மற்றும் அவரது நண்பர் இருவரும் மலேசியப் பிரதமரை சந்தித்துள்ளார்கள். கொலைக்களங்களை காட்டவிடாது தடுத்தமைக்கு அவர்கள் மலேசியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6689

Geen opmerkingen:

Een reactie posten