தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 april 2014

தலைமறைவாகியுள்ள கோபி உள்ளிட்ட குழுவைத் தேட மேலதிக பொலிஸ் - இலங்கையில் புலிகள் உட்பட 16 அமைப்புகளுக்கு தடை !

முள்ளியவளை பிரதேசத்தில் இராணுவத்தினர் தீவிர தேடுதல்: இருவர் கைது
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 07:07.46 AM GMT ]
முள்ளியவளை முறிப்புப் பகுதியில் நேற்று இராணுவத்தினரால் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முள்ளியவளை முறிப்புப் பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் மூன்று வெள்ளை வான்களில் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர்.
அவர்கள், தேடுதலில் ஈடுபட்டதுடன், அந்தப் பகுதியிலிருந்து இருவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் முன்னாள் போராளி என்பதுடன் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகின்றது. மற்றையவர் அதேயிடத்தைச் சேர்ந்தவர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைது செய்ய முற்பட்டனர் என்று நம்பப்படும் மற்றொரு சந்தேக நபர் ஒருவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார் என்று கூறப்படுகின்றது.
அதையடுத்து அந்தப் பகுதியில் கவச வாகனங்களில் கொண்டு வரப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.
காலையில் தொடங்கப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் மாலை 4 மணிவரையில் நீடித்தாகத் தகவல்கள் தெரிவித்தன.
http://www.tamilwin.com/show-RUmsyETVLWhv3.html
இராமேஸ்வர மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 06:57.08 AM GMT ]
கச்சதீவுக்கருகில் மீன்பிடித்து கொண்டிந்த 21 தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில், 4 மீனவர்கள் காயமடைந்து இராமேஸ்வரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 20-க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து கொண்டதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிப்பதாகக் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீனவர்களின் படகுகள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தங்களின் படகுகளைக் கொண்டு மோதியுள்ளனர். இதில், 5 லட்ச ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டின் முதல் 3 மாதத்தில் 551 மீனவர்களை கடல் எல்லையில் தாக்குதல் நடத்தி விரட்டி அடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள கோபி உள்ளிட்ட குழுவைத் தேட மேலதிக பொலிஸ் - இலங்கையில் புலிகள் உட்பட 16 அமைப்புகளுக்கு தடை !
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 07:57.47 AM GMT ]
தமிமீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினை மீள ஒருங்கிணைக்கும் நோக்கில் தலைமறைவாகியுள்ள முன்னாள் போராளி கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.
குறித்த நபர்களைத் தேடி மேலதிக பொலிஸ் குழு தனது தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால் தெரிவிக்கும்படி பொலிஸார் பொது மக்களிடம் கோரி வருகின்றனர்.
அரச விரோத துண்டுப்பிரசுரம் விநியோகம் தொடர்பில் கோபி மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், விடுதலை புலிகள் அமைப்பை மீள கட்டியெழுப்பி அதற்கு தலைமை வகிக்க கோபி உள்ளிட்ட குழுவினர் முனைவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
கடந்த வாரம் வட்டுக்கோட்டையில் தேடுதல் நடத்திய இராணுவம் ஒருவரைக் கைது செய்ததுடன், அவரை கோபியின் சகா என அறிவித்திருந்தது.
அத்துடன், அந்நபர் வெளியிட்ட தகவலின்படி, மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களும் மீட்கப்பட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
புலிகள் உட்பட 16 அமைப்புகளுக்கு தடை
தமிழீழ விடுதலைப்புலிகளின் நோக்கங்களுக்காக வெளிநாடுகளிலிருந்து இயங்குவதாக நம்பப்படும் 15 இயக்கங்களை பயங்கரவாத இயக்கங்கள் என்று தடைசெய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வந்த பிரேணை வெற்றிபெற்ற நிலையில், அரசாங்கம் இந்த தீவிர நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அதுவும் ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அமெரிக்காவினால் 28.9.2001ல் கொண்டுவரப்பட்ட பிரேரணை எண் 1373 மூலமாக இந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
இரட்டை கோபுரங்களில் தாக்குதல் அடுத்து ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா சமர்பித்த இந்ந பிரேரணை, வெளிநாடுகளில் இருந்து தீவிரவாத அமைப்புக்களை தடை செய்யும் அதிகாரம் கொண்டது.
இதன் அடிப்படையில்,இலங்கை அரசாங்கம் அமெரிக்கா உட்பட கனடா,பிரித்தானியா ,நோர்வே, இத்தாலி,சுவிட்சர்லாந்து,பிரான்ஸ்,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்களை தடைசெய்து பிரகடனப்படுத்தியுள்ளது.
இந்த இயக்கங்களில் நியூயோர்க்கிலிருந்து செயல்படும் இடைக்கால தமிழீழ அரசாங்கம்;,கத்தோலிக்க குரு. அருட்தந்தை. இமானுவேலின் அகில உலக தமிழ் முன்னணி, நெடியவனின் விடுதலைப்புலிகள் அமைப்பு, விநாயகம் என்று அழைக்கப்படும் விநாயக மூர்த்தியின் புலிகள் ஆதரவு இயக்கம் ஆகியவை அடங்கும்.
வெளிவிவகார அமைச்சசர் ஜி.எல் பீரிசினால் முழு விபரங்கள் இந்த வாரம் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் பதினைந்து மேலதிக இயக்கங்களும் இப்போது தடைசெய்யப்படுகின்றன.இலங்கையிலிருந்து இந்த இயக்கங்களுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்படுவார்கள்
முக்கியமாக பின் வருபவர்களிடம் தொடர்பு வைத்திருக்கும் எவரும் குற்றவாளிகளாக கருதபட்டு கைது செய்யப்படலாம்:
1. நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன்--
2. கத்தோலிக்க மத குரு அருட்தந்தை. இமானுவேல்
3. விஸ்வநாதன் ருத்திரகுமாரன்
4. விநாயகம் எனப்படும் சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி
இவர்களும், இவர்களது இயக்கங்களும் தடைசெய்யப்பட்டமை என்று அந்தந்த நாடுகளுக்கு தெரிவிக்க இலங்கை அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
தடைசெய்யப்படவுள்ள இயக்கங்கள்
1.தமிழீழ விடுதலை புலிகள்
2.தமிழ் புனர்வாழ்வு அமைப்பு
3.தமிழ் ஒருங்கிணைப்பு குழு
4.பிரித்தானிய தமிழ் மன்றம்
5.உலக தமிழ் இயக்கம்
6.கனேடிய தழிழ் காங்கிரஸ்
7.அவுஸ்திரேலிய தழிழ் காங்கிரஸ்
8.உலக தமிழ் மன்றம்
9.கனேடிய தழிழர்களுக்கான தேசிய பேரவை
10. தேசிய தழிழ் பேரவை
11.தமிழ் இளைஞர் அமைப்பு
12.உலக தழிழர் ஒருங்கமைப்பு குழு
13.தழிழீழ நாடு கடந்த அரசாங்கம்
14.தழிழீழ மக்கள் கூட்டம்
15.உலக தழிழ் நிவாரண நிதியம்
16.தலைமை காரியாலய குழு
ஆகிய அமைப்புகளுக்கே தடைவிதிக்கப்படவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyETVLWhv4.html

Geen opmerkingen:

Een reactie posten