தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 1 april 2014

ivanellaam tamilan?????

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியாவின் இராஜதந்திரம்!- ஞானதேசிகன்
[ செவ்வாய்க்கிழமை, 01 ஏப்ரல் 2014, 03:11.01 AM GMT ]
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது இந்தியாவின் இராஜதந்திரமுறை. அதனால் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லையென்று மட்டும் எண்ணிவிடக்கூடாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
ஞானதேசிகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்கையில்,
இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது குறித்து மத்திய அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்து அவர்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் இதற்கு முன்பு 2 முறை இந்தியா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
இது குறித்து பாராளுமன்றத்தில் நான் பேசியுள்ளேன். காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று பிரதமரை சந்தித்து ஆதரவளிக்க கோரினோம். ஆனால் தற்போது தீர்மானத்தை புறக்கணித்துள்ளது இந்தியாவின் ராஜதந்திரமுறை. அதனால் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கவில்லையென்று மட்டும் எண்ணிவிடக்கூடாது.
ஏன் ஆதரவாக வாக்களிக்கவில்லையென வெளிவிவகாரத்துறை செயலாளர் விளக்கமளித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் 13–வது அரசியல் அமைப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அங்கு நடக்கும் உதவிகள் தொடர்ந்து அவர்களுக்கு கிடைக்க உறுதிசெய்ய வேண்டுமென வெளிவிவகாரத்துறை செயலர் கூறியிருக்கிறார்.
இதுதான் இந்தியாவின் அதிகாரபூர்வ நிலைப்பாடு. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காததால், உடனேயே இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டுள்ளனர். என்றார் ஞானதேசிகன்.
http://www.tamilwin.com/show-RUmsyETVLWhu5.html

Geen opmerkingen:

Een reactie posten