தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 19 april 2014

இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம்!-சிங்கள ஊடகம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரிடம் விரைவில் விசாரணை?
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 11:39.45 PM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
புலிகளின் புதிய தலைவர் என குறிப்பிடப்பட்ட கோபியுடன் தொடர்புகளைப் பேணியதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கோபி மற்றம் இரண்டு சகாக்களுடன் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணைப் பிரிவு குறித்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் இன்று அல்லது நாளை விசாரணை நடாத்த உள்ளது.
அண்மையில் நெடுங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் கோபி கொல்லப்பட்டார்.
கோபியிடம் மீட்கப்பட்ட செல்லிடப் பேசியின் தகவல்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன் உறுப்பினர் விசாரணை செய்யப்பட உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjt7.html
இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம்!-சிங்கள ஊடகம்
[ வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2014, 11:33.54 PM GMT ]
சர்வதேச பொலிஸாரான இன்டர் போலினால் தேடப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு 11 நாடுகள் அடைக்கலம் வழங்கி வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இன்டர் போலினால் 299 தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிகப்பு சமிக்ஞை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் அதிகளவான புலி உறுப்பினர்களுக்கு கனடா அடைக்கலம் வழங்கியுள்ளது.
கனடாவில் 78 பேருக்கும்,  ஜெர்மனியில் 48 பேருக்கும்,  இத்தாலியில் 25 பேருக்கும்,  பிரான்ஸில் 43 பேருக்கும்,  நெதர்லாந்தில் 31 பேருக்கும்,  நோர்வேயில் 13 பேருக்கும்,  அமெரிக்காவில் 11 பேருக்கும்,  பெல்ஜியம் மற்றும் சுவிட்சர்லாந்தில் 70 பேருக்கும் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசியல் புகலிடம் வழங்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளில் 90 பேருக்கு சர்வதேச பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திவயின பததிரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyEScLXjt6.html

Geen opmerkingen:

Een reactie posten