பருத்தித்துறையில் உள்ள சுரங்கப்பாதை புலிகள் பாவித்ததா? தீவிரமாக தோண்டும் பணியில் இராணுவமும் சீனர்களும்!
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 08:06.58 AM GMT ]
பருத்தித்துறை நகரின் மத்தியில் பஸ் நிலையத்தில் வீதி திருத்தப் பணிகள் ஈடுபட்டிருந்த புல்டோசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது.
இதன் பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்தனர்.
இது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப்பாதை தானா? என இராணுவத்தினர் ஆய்வுகளை செய்தனர்.
இந்நிலையில் இன்று அப்பகுதியை இராணுவத்தினர் சீனப் பணியாளர்களின் உதவியுடன் தோண்டி அது ஊடகங்களில் வெளியாகியது போன்று விடுதலைப் புலிகள் பாவித்த சுரங்க வழிப் பாதைதானா என கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வெலிவேரிய சம்பவம் இராணுவத்தின் வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி: சரத் பொன்சேகா
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 06:23.36 AM GMT ]
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்தின் மூலம் இராணுவத்திற்கு வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளி ஏற்பட்டு விட்டது.
சாதாரணமாக நியாயமான கோரிக்கை ஒன்றை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
நாங்கள் மருத்துவமனைக்கு சென்று சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரித்தோம்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்களில் பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத வீதியில் சென்றவர்கள் என்பது விசாரித்ததில் தெரியவந்தது.
வீதியில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
இதனை கண்டு, அவர்கள் கூறியதை கேட்ட போது, இராணுவ சீருடையை அணிந்திருந்த இராணுவ என்ற முறையில், எனக்கு வெட்கமாக இருந்தது என்றார்.
சரத் பொன்சேக்கா வெலிவேரிய சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேற்று சென்று பார்வையிட்டுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten