தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 11 augustus 2013

ஹக்கீம் கூறிய பொய்யே கிராண்ட்பாஸ் மசூதி தாக்கப்படக் காரணம்: ஜனாதிபதி!


அரசாங்கத்தின் ஒட்டுக்குழுக்களாக செயற்படும் பேரினவாத பௌத்த பிக்குமாரை கொண்ட வன்முறை கும்பலே கிராண்ட்பாஸ் முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதலை நடத்தியிருப்பதாக சிங்கள ஊடாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கண்டியில் இருந்த நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தொலைபேசியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அப்போது பதிலளித்துள்ள ஜனாதிபதி, இதற்கு அமைச்சர் ஹக்கீம் பொறுப்பு கூறவேண்டும் என்று கூறியுள்ளார்.
அமைச்சர் ஏன் தான் பொறுப்பு கூறவேண்டும் என்று வினவிய போது, நீங்கள் பள்ளிகளை உடைப்பதாக கிழக்கு மாகாணத்திற்கு சென்று பொய்களை கூறியதால், கோபமடைந்த இளைஞர்கள் பள்ளியை தாக்கியிருக்கலாம். குழப்பமடைய வேண்டாம் இது ஒரு சிறிய சம்பவம் என்று ஜனாதிபதி, அமைச்சர் ஹக்கீமுக்கு பதிலளித்துள்ளர் என்றும் அந்த ஊடகத்தில் கூறப்பட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten