[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 03:05.15 AM GMT ]
கடற்றொழில் அமைச்சினால் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள 31 மில்லியன் ரூபா செலவிலான வேலைத் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்கே அவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஏற்கனவே யாழ்.பாஷையூரில் அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இறங்குதுறை கையளிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவரது விஜயம் திடீரென்று ரத்துச் செய்யப்பட்டிருந்தது.
13வது திருத்தச் சட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வது அரசாங்கத்திற்கு பாரிய சவலாக இருக்கும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
இரண்டாம் இணைப்பு-
கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் ராஜித சேனாரத்ன இரண்டுநாள் விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 10 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ளதாக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவிப் பணிப்பாளர் ந.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
எதிர்வரும் 10 ஆம் திகதி சேந்தாங்குளத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர் படகுகள் மற்றும் இயந்திர உபகரணங்கள் முதலியவற்றை அப்பகுதி கடற்றொழிலிலாளர் குடும்பங்களுக்கு வழங்கிவைப்பதுடன் சுழிபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இளைப்பாறு மண்டபம் துறைமுகம், வீதி என்பனவற் றைத் திறந்து வைக்கவுள்ளதுடன் பலாலி மற்றும் வடமராட்சிப் பகுதிக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
அங்கு பொதுமண்ட பம், ஏலவிற்பனை நிலையம் என்பவற்றையும் திறந்துவைக்கவுள்ளார். அதன் பின்னர் மறுநாள் நெடுந்தீவு செல்லும் அமைச்சர் அங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இளைப்பாறு மண்டபம், ஏலவிற்பனை நிலையம் என்பனவற்றைத் திறந்து வைக்கவுள்ளார்.
அத்துடன் அன்றைய தினம் பிற்பகல் கிளிநொச்சி செல்லும் அவர் அங்கும் பல நிகழ்வுகளில் கலந்துகொள்வதுடன் மறுநாள் 12 ஆம் திகதி மன்னாரிற்கும் விஜயம் செய்யவுள்ளதாக உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் மீது இராணுவத் தாக்குதல் நடத்தியமை பாரிய குற்றமாகும்: வாசுதேவ நாணயக்கார
[ செவ்வாய்க்கிழமை, 06 ஓகஸ்ட் 2013, 02:13.56 AM GMT ]
தொழிற்சாலை காரணமாக நீர் அசுத்தமடைவதாக மக்கள் முறைப்பாடு செய்திருந்தனர். எனினும், தொழிற்சாலையின் உரிமையாளர் செல்வாக்கு மிக்கவர் என்ற காரணத்தினால் இந்த முற்றப்பாடுகளை பொலிஸார் உதாசீனம் செய்துள்ளனர்.
ஒரு முற்றப்பாடு என்றாலும் அதனை விசாரணை செய்ய வேண்டியது பொலிஸாரின் கடமையாகும்.
போராட்டக்காரர்களை கலைப்பது அரசாங்கத்தின் கடமையாகும், சட்டம் ஒழுங்கை கருத்திற் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற வேண்டிய அவசியம் எழுந்திருக்கும்.
எனினும், இராணுவத்தினரை ஈடுபடுத்தி தாக்குதல் நடத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் இராணுவத்தினரும் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிடுகின்றனர். எனவே அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten