தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 15 augustus 2013

அரசியல் தீர்வு காண்பதாக, அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும்! இந்திய உயர்ஸ்தானிகர்

மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா இன்று வியாழக்கிழமை வெகு விமர்சையாக இடம்பெற்றது.
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 01:03.33 PM GMT ]
மடு திருவிழா திருப்பலி மன்னார் மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தலைமையில் காலை 6.30 மணிக்கு இடம்பெற்றது.
இதில் திருத்தந்தையின் இலங்கைக்கான பிரதிநிதி அதிவணக்கத்திற்குரிய ஜோசப் ஸ்பிற்ரேரி ஆண்டகை,கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் இளைப்பாறிய பேராயர் ஒஸ்வெல்ட் கோமிஸ் ஆண்டகை, யாழ் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகை, கண்டி மறை மாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய வியான்னி பெர்னாண்டோ ஆண்டகை, அனுராதபுர மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய நோபட் அன்றாடி ஆண்டகை மற்றும் நுற்றிற்கும் மேற்பட்ட குருக்களும் இணைந்து திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து மடு அனனையின் திருச்சொரூப பவனியும் இடம் பெற்றது. இதன் போது சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசிரைப்பெற்றனர்.


அரசியல் தீர்வு காண்பதாக, அளித்த வாக்குறுதியை இலங்கை அரசு காப்பாற்ற வேண்டும்! இந்திய உயர்ஸ்தானிகர்
[ வியாழக்கிழமை, 15 ஓகஸ்ட் 2013, 03:15.09 PM GMT ]
சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே,இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா, இன்று இந்தியாவின் 67வது சுதந்திரத்தை முன்னிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல் நீதியானதானவும் நியாயமான முறையிலும் நடைபெறும் என நாம் நம்புகின்றோம்.
இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இந்தியா தனது கருத்தை தெரியப்படுத்தியுள்ளது.
மேலும், தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம், நிலையான அரசியல் தீர்வு ஒன்று காண்பதாக, இந்தியாவுக்கும், அனைத்துலக சமூகத்துக்கும் அளித்த வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும்.
சமத்துவம், நீதி, கௌரவம், சுயமரியாதையுடன் கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை உறுதிப்படுத்துவதன் மூலமே, இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட எல்லா குடிமக்களும் சம பங்காளராக வாழ முடியும் என்று தெரிவித்தார்.
போரின் முடிவு, எல்லா சமூகங்களும் இலங்கையில் நல்ல எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்வதற்கான இணையற்ற வாய்ப்பை வழங்கியுள்ளது என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten