தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

டெசோ சார்பில் தமிழகமெங்கும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்


ஏறாவூரில் இந்திய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 06:41.36 AM GMT ]
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் இந்திய பெண்ணொருவரை் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
47 வயதான இந்த இந்திய பெண், சுற்றுலா விசா அனுமதியில் இலங்கைக்கு சென்றிருந்தாகவும் அவர் ஏறாவூர் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆடைகளை விற்பனை செய்து வந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட பெண், இன்று ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.
இந்தியாவில் இருந்து சுற்றுலா விசா அனுமதியில் இலங்கை செல்லும் இந்திய பிரஜைகள், இலங்கையில் பல பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் கைதுசெய்து நாடு கடத்தி வருகிறது. அத்துடன் இந்தியாவில் இருந்து செல்லும் இவர்கள் விவசாயம் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருந்த பலர், யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியிலும் கிழக்கிலும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
டெசோ சார்பில் தமிழகமெங்கும் தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
[ வியாழக்கிழமை, 08 ஓகஸ்ட் 2013, 05:57.34 AM GMT ]
இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள் ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழு:சசியை ஒன்று திரட்டவும் டெசோ இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் இன்று தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 16.07.2013 அன்று நடைபெற்ற டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில், இலங்கை அரசமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வலியுறுத்தியும், இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது, தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டி நிறைவேற்றப்பட்டுள்ள நான்கு தீர்மானங்களையும், தமிழக மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லவும், இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், சிங்கள் ஆதிக்க வெறிக்கு எதிராக தமிழர் எழு:சசியை ஒன்று திரட்டவும் டெசோ இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத் தலைநகரங்களில் 08.08.2013 அன்று தமிழர் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி
சென்னையில் திமுக தலைவர் கலைஞர்,
மதுரையில் கி.வீரமணி,
திருச்சியில் மு.க.ஸ்டாலின்,
திருவள்ளூரில் தொல்.திருமாவளவன்,
கோவையில் சுப்புலட்சுமி ஜெகதீசன்,
காஞ்சிபுரத்தில் துரைமுருகன்,
வேலூரில் வி.பி. துரைசாமி,
உதகையில் ஆலந்தூர் பாரதி,
திருப்பூரில் கோவை. மு. இராமநாதன்,
நாகப்பட்டினத்தில் அ.இரகுமான்கான்,
திண்டிவனத்தில் திருச்சி என்.சிவா,
திருநெல்வேலியில் பொன்.முத்துராமலிங்கம்,
இராமநாதபுரத்தில் கடலூர் இள.புகழேந்தி,
விருதுநகரில் பேரூர். அ.நடராஜன்,
தஞ்சாவூரில் குஷ்பு சுந்தர்,
நாமக்கல்லில் வாகை சந்திரசேகர்,
அரியலூரில் நடிகர் குமரிமுத்து,
ஈரோட்டில் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதேபோல் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் முன்பு, டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட வலியுறுத்தி, இன்று திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.

Geen opmerkingen:

Een reactie posten