இந்திய அரசாங்க அதிகாரிகளுடன் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
என்ன விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிசும் அடுத்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய பிரதமருக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்க ஜீ.எல்.பீரிஸ் இந்தியா விஜயம்
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரில் சென்று அழைப்பு விடுப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளும் படி இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நேரில் சென்று அழைப்பு விடுப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
ஒருநாள் பயணமாக செல்லும் அவர், புதுடில்லியில் பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுச் செயலர் சுஜாதா சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்துப் கலந்துரையாடவுள்ளார்.
இதுதவிர, இந்திய பிரதமருடனான பேச்சின் போது எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் கூட்டத்தில் உறுப்பு நாடு என்ற வகையில் கலந்துகொள்வது தொடர்பில் முறைப்படி அழைப்பு விடுக்கவுள்ளார்.
இந்த சந்திப்பில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், உலக நாடுகள் பங்கேற்கும் மாநாட்டை அரசியல் காரணங்களைக் கூறி தவிர்க்கக்கூடாது என்று மத்திய அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்தமுறை பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் அமைதி, ஜனநாயகம், சிறந்த ஆளுகை, நீடித்த வளர்ச்சி, கடன் மேலாண்மை நிர்வாகம், கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம், மனித உரிமைகள், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, சட்டம், பரஸ்பர வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten