தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 4 augustus 2013

கைகொடுப்பாரா நவநீதம்பிள்ளை?

தயா மாஸ்டர் நீக்கப்பட்டது ஏன்?
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 02:10.28 PM GMT ]
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான, வேட்பாளர் பட்டியல்கள் வெளியாவதற்கு சில நாட்கள் முன்னதாக யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலேயே ஈ.பி.டி.பி. போட்டியிடப் போவதாக அறிவிப்பதற்கான சந்திப்பே அது.
டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தகவல் பரவலாக உறுதிப்படுத்தப்பட்டிருந்த அந்தச் சூழலில், இந்தத் தேர்தலில் நீங்கள் போட்டியிடவில்லையா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர் நேரடியாகப் பதிலளிக்கவில்லை.
இறுதிவரை பொறுத்திருக்கும் படியும், வேட்பாளர் பட்டியல் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். 
உண்மையில், ஈ.பி.டி.பி.யின் வேட்பாளர்களில் அப்படியானதொரு அதிர்ச்சியை கொடுக்கக் கூடியவர்களாக யாரும் இருக்கவில்லை.
ஈ.பி.டி.பி.யில் எதிர்பார்க்கப்படாத ஒரு வேட்பாளர் சுந்தரம் டிவகலாலா தான்.
முன்னாள் நிர்வாகசேவை அதிகாரியான அவர், கடைசியாக வடக்கு, கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
போர் முடிவுக்கு வந்தவுடனேயே, மாகாண சபை ஆசனம் மீது குறிவைத்திருந்தவர்.
அதற்காக சிலரை அணிதிரட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்பதற்கான எத்தனங்களை நீண்டகாலத்துக்கு முன்னரே மேற்கொண்டவர்.
ஆனால் அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டு கொள்ளாமல் போனதால், கடைசியாக ஈ.பி.டி.பி. பக்கம் போய் சேர்ந்து தனது மாகாண சபைக் கனவை நனவாக்க முயன்றுள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கூறிய அதிர்ச்சியான தகவல், டிவகலாலா பற்றியது அல்ல. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இருந்து தயா மாஸ்டர் நீக்கப்பட்டது தான் பரபரப்பான- அதிர்ச்சியான செய்தியாக அடிபட்டது.
இவர் அரசதரப்பின் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டத ற்கு டக்ளஸ் தேவானந்தாவின் நெரு க்குதலே காரணம் என்ற பரவலான கருத்து இருந்த போதிலும், அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த வாரம் நிராகரித்துள்ளார்.
எனினும், தயா மாஸ்டர் நீக்கம் பற்றிய தகவலை அவர் முன்னரே அறிந்திருந்தார் என்பதையே, அவர் கூறிய அதிர்ச்சியான செய்திக்கு காத்திருங்கள் என்ற கருத்து உறுதிப்படுத்துகிறது.
முன்னர், ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து செயற்பட்டிருந்த தயா மாஸ்டர், ஆளும் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதற்காக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து கொண்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் அரசாங்கமும், அவரை நன்றாகவே நம்பவைத்து கழுத்தறுத்து விட்டன என்பதே உண்மை.
ஏனென்றால், தயா மாஸ்டருக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு, உச்சியில் ஏற்றிவிட்டு குப்புறத் தள்ளிவிட்டது அரசாங்கம் தான். எதற்காக அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டது? - ஏன் அவர் ஒதுக்கப்பட்டார்? என்ற கேள்விக்கான சரியான பதில் இதுவரை இல்லை. அவரைத் தேடிச் சென்று அரசியலுக்குப் பொருத்தமானவர் என்று இழுத்து வந்த அரசாங்கமே, கடைசி யில் அவரைப் பொருத்தமற்றவர், தகைமையற்றவர் என்று ஒதுக்கித் தள்ளி விட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் ஊடகம் ஒன்றில் பணியாற்றி வந்த, தயா மாஸ்டரை சுதந்திரக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட இழுத்து வந்தது பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தான்.
வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பப் பணிகள் தொடங்க முன்னரே இவரை அரசியலுக்கு இழுத்து வரும் நகர்வை மேற்கொண்டிருந்தார் கோத்தபாய.
அதன் தொடர்ச்சியாக, தயா மாஸ்டர் சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.
சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தாம் அந்தக் கட்சியில் போட்டியிட முன்வந்ததாகவும், அதற்காகவே அந்தக் கட்சியில் இணைந்து கொண்டதாகவும், தயா மாஸ்டர் ஊடகங்களுக்கு தெளிவாக கூறியுள்ளார்.
ஆக, சுய அரசியல் ஆர்வத்தினால் அவர் இந்த அரங்கிற்கு வரவில்லை, அரசாங்கத்தினால் இழுத்து வரப்பட்டிருந்தார் என்பதே உண்மை.
இவரை மட்டுமன்றி, விடுதலைப் புலிகளின், முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரான கே.பி எனப்படும் செல்வராசா பத்மநாதன், முன்னாள் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஆகியோரையும், வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு இழுத்து வர முயன்றது அரசாங்கம்.
ஆனால் அவர்களெல்லாம், சாதுரியமாக ஒதுங்கிக் கொண்டதால், தயா மாஸ்டரைப் போன்ற நிலைக்கு உள்ளாகாமல் தப்பிக் கொண்டனர்.
சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட பின்னர், தயா மாஸ்டர் முன்னாள் போராளிகள் பலரையும் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு முயன்றபோதிலும் அதுவும் கைகூடவில்லை.
கடைசியில் அவர் ஒருவரே, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி என்ற அடைமொழியுடன் அரச வேட்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.
வேட்பாளர் நேர்முகத் தேர்வு முடிந்த பின்னரும், அவர் ஒருவரே, அரசதரப்பில் போட்டியிடவுள்ள முன்னாள் போராளி என்று அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேம் ஜெயந்த் போன்றவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
ஆனால் கடைசியில் சுதந்திரக் கட்சியின் பட்டியலில் அவரது பெயர் இருக்கவில்லை.
அவர் அதில் இடம்பெறாத தகவலைக் கூட கட்சித் தலைமை, சக வேட்பாளரும், யாழ்.மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் மூலமே தெரியப்படுத்தியது.
அரசாங்கத் தரப்பு தயா மாஸ்டரை திட்டம் போட்டு பழிவாங்கி விட்டதாகவே இதனைக் கருதலாம்.
வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக அரசதரப்பினால், நிறுத்தப்படவுள்ள வேட்பாளர் என்று முன்னர் ஊடகங்களில் தயா மாஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டார்.
ஆனால் கடைசியில் அவரது பெயர் வேட்பாளர் பட்டியலில் கூட இடம்பெறவில்லை.
எதற்காக இவரது பெயர் நீக்கப்பட்டது என்பதற்கு அரசதரப்புக் கூறும் நியாயம் அந்தளவுக்குப் பொருத்தமானதாக இல்லை.
சுதந்திரக் கட்சிக்கு வரையறுக்கப்பட்ட ஆசனங்கள் தான் இருந்தன, அவற்றுக்கு மிகப் பொருத்தமான, வெற்றிபெறத் தகுதிவாய்ந்தவர்க ளையே போட்டியில் நிறுத்தியுள்ளதாக, அமைச்சர்கள் நியாயம் கூறுகின்றனர்.
இருந்தாலும், இது உண்மைக் காரணம் என்று கூற முடியாது. ஏனென்றால், வடக்கு மாகாண சபைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகு முன்னரே, அதற்கான முன்னா யத்தங்களை இவரை வைத்தே கோத்தாபய ராஜபக்ச முன்னெடுத்திருந்தார்.
அப்போது தகைமையானவர் என்று தெரிந்ததால் தான், அவரைத் தேடிச் சென்றிருந்தார் கோத்தபாய.
திடீரென அவர் தகைமையற்றவ ராக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன, ஊகிக்கப்படுகின்றன.
முதலாவது  சுதந்திரக் கட்சியில் இணைந்த பின்னர், 13வது திருத்தச் சட்டத்தின் அவசியத்தை வலியுறுத்தி வெளியிட்ட கருத்து.
இரண்டாவது  13வது திருத்தச்சட்ட விவகாரத்தில், அரச உயர்மட்டத்துக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கருதப்படும் சூழலில், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவினால் கொண்டு வரப்பட்டவர் என்பதால் நிராகரிக்கப்பட்டிருக்கலாம்.
மூன்றாவது  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நெருக்குதல்.
நான்காவது  விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பேச்சாளராக இருந்தவர், அரசதரப்பின் மாகாண சபை வேட்பாளராக போட்டியிடுவதற்குக் கூடத் தகைமையற்றவர் என்று காட்டி அவமானப்படுத்துவது.
ஐந்து  தனக்குப் பின்னால், ஒருதொகுதி முன்னாள் போராளிகளை அணிதிரட்டி அரசின் பின்னால் கொண்டு செல்லத் தவறியது.
ஆறு  அரசதரப்பு முன்னாள் விடுதலைப் புலிகளின் தயவில் ஆட்சியைப் பிடிக்க முனைகிறது என்ற விமர்சனங்களை தவிர்ப்பதற்கு.
ஏழு  அறிமுகமான வேட்பாளராக இருந்தாலும், வாக்குகளைக் கவரும் திறன் இவருக்கு இல்லை என்றும், முன்னாள் புலியான இவரை அரச வேட்பாளராக ஏற்கும் நிலையில் மக்கள் இல்லை என்றும் கொடுக்கப்பட்ட புலனாய்வு அறிக்கை கூறுகிறது.
இப்படிப் பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஊகிக்கப்படுகின்றன. இதில் சரியான காரணம் என்ன என்பதை, அரச உயர்மட்டம் தான் அறியும்.
வேட்பாளர் தெரிவு முடிந்த பின்னர், இவரும் ஒரு வேட்பாளர் என்று வேட்பாளர் தெரிவுக்குழுவில் இடம்பெற்ற அமைச்சர்களால் கூறப்பட்டதுடன், இறுதி முடிவை ஜனாதிபதியே எடுப்பார் என்றும் கூறியிருந்தனர்.
தயா மாஸ்டர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும், வேட்பாளர்களைத் தெரிவு செய்தது, வேட்பாளர் தெரிவுக்குழுவே என்று தான் தப்பிக் கொண்டார் ஜனாதிபதி.
எது எவ்வாறாயினும், ஆங்கில நாளிதழ் ஒன்று தலைப்பிட்டது போன்று அரசாங்கம் தயா மாஸ்டரின் முதுகில் குத்திவிட்டதாகவே உணரப்படுகிறது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிட வைத்து, மீண்டும் தமிழ்த் தேசிய சக்திகள் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் வெறுப்பையும் சம்பாதிக்க வைத்து விட்டு, கடைசியில் இவரது காலை வாரிவிட்டது அரசாங்கம்.
அரசாங்கத்தின் தெரிவை ஏற்காது போயிருந்தால் சிலவேளைகளில் இவருக்கு ஈ.பி.டி.பி.யாவது வாய்ப்பைக் கொடுத்திருக்கும்.
ஆனால், இப்போது தயா மாஸ்டரின் நிலை அரசனை நம்பி புருஷனைப் பறிகொடுத்தாக அமைந்து விட்டது.
கபில்
  

கைகொடுப்பாரா நவநீதம்பிள்ளை?
[ ஞாயிற்றுக்கிழமை, 04 ஓகஸ்ட் 2013, 01:56.29 PM GMT ]
ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை அடுத்த மூன்று வாரங்­களில் இலங்­கைக்கு பயணம் மேற்­கொள்­ள­வுள்ள நிலையில், அர­சாங்­கமும் தற்­காப்பு நட­வ­டிக்­கைகள் சில­வற்றில் இறங்­கி­யுள்­ ளது.
வரும் 25ஆம் திகதி தொடக்கம், 31 ஆம் திகதி வரை நவ­நீ­தம்­பிள்ளை இலங்­கையில் பய­ணத்தை மேற்­கொள்­கிறார்.
அவ­ரது ஒரு­வார கால உண்மை கண்­ட­றியும் பயணம், 31 ஆம் திகதி கொழும்பில் நடத்­த­வுள்ள செய்­தி­யாளர் சந்­திப்­புடன் நிறை­வ­டையும்.
இலங்கை அர­சாங்கம் தொடர்­பான கடு­ மை­யான விமர்­ச­னங்­களை சர்­வ­தேச அரங் கில் முன்­வைத்து வரு­ப­வர்­களில் நவ­நீ­தம்­பிள்­ளையும் ஒருவர்.
அவர் ஒரு தமிழர் என்­பதால், இலங்கை அர­சுக்கு எதி­ராகச் செயற்­ப­டு­வ­தாக கூட அர­சாங்கம் அவரை விமர்­சித்­தது.
எப்­போ­தெல்லாம், ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையில், இலங்கை விவ­காரம் குறித்து விவாதம் எழு­கி­றதோ, அப்­போ­தெல்லாம், நவ­நீ­தம்­பிள்­ளையும் அவ­ரது பணி­ய­கமும், நடு­நி­லை­யுடன் செயற்­ப­ட­வில்லை என்றும், பக்­கச்­சார்­பாக நடந்து கொள்­வ­தா­கவும் குற்­றஞ்­சாட்­டு­வது இலங்­கையின் வழக்கம்.
இலங்கை அர­சாங்­கத்தின் மீது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன் வைப்­ப­வ­ராக நவ­நீ­தம்­பிள்­ளையும், அவரை கடு­மை­யாக விமர்­சிக்கும் நிலையில் இலங்கை அர­சாங்­கமும் இருக்கும் நிலையில், இந்தப் பயணம் உல­க­ளவில் முக்கி­ய­மா­ன­தாக கரு­தப்­ப­டு­கி­றது.
ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்­துக்­க­மை­யவே இலங்கை வரும் நவ­நீ­தம்­பிள்ளை, இங்­குள்ள நிலை­மை­களைப் பார்­வை­யிட்டு, முன்­னேற்­றங்கள் குறித்து அறிக்கை சமர்ப்­பிக்­கும்­ப­டியும் பணிக்­கப்­பட்­டுள்ளார். நவநீதம்பிள்­ளையின் இலங்கைப் பயணம் முடிந்த அடுத்­த­வா­ரமே, ஐ.நா மனி­த­ உ­ரி­மைகள் பேர­வையின் 24ஆவது அமர்வு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.
அந்த அமர்வில் தனது இலங்கைப் பய ணம் குறித்த அறிக்­கையை நவ­நீ­தம்­பிள்ளை சமர்ப்­பிக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. முழு­மை­யாக இல்­லா­விட்­டாலும், இலங்கை குறித்த ஒரு மேலோட்­ட­மான- இடைக்­கால அறிக்­கை­யை­யா­வது அவர் ஜெனீ­வாவில் அடுத்த மாதம் முன்­வைப்­ப­தற்கு சாத்­தி­ய­முள்­ளதால், அர­சாங்கம் முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் இருப்­ப­தாகத் தெரி­கி­றது.
உண்­மையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்­க­வுள்ள 25ஆவது அமர்வில் தான், இலங்கை நிலை­மை­களின் முன்­னேற் றம் குறித்த முழு­மை­யான அறிக்­கையை சமர்ப்­பிக்க வேண்டும் என்று ஐ.நா மனி­த ­உ­ரி­மைகள் பேரவைத் தீர்­மா­னத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
அதன்­படி, 25ஆவது அமர்வில் எத்­த­கைய அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­டு­வது என்­பது குறித்து அர­சாங்கம் இப்­போது கவ­லைப்­ப­ட­வில்லை.
24வது அமர்வில் நவ­நீ­தம்­பிள்ளை இடைக்­கால அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தா­னாலும், அதில் குற்றம் காணப்­படக் கூடாது என்­பதில் உறு­தி­யாக உள்­ளது.
ஏனென்றால், நவ­நீ­தம்­பிள்ளை அளிக்கும் அறிக்கை இலங்கை அர­சாங்­கத்­துக்குப் பாத­க­மாக அமைந்து விட்டால், வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடக்­க­வுள்ள கொமன்வெல்த் மாநாட்டை அது பாதிக்கும்.
ஏற்­க­னவே, கனடா, பிரித்­தா­னியா போன்ற நாடுகள் கொமன்வெல்த் மாநாட்­டையும் மனி­த­ உ­ரிமை விவ­கா­ரங்­க­ளையும் இணைத்து வைத்து தலை­யிடி கொடுத்து வரு­கின்­றன.
இந்­த ­நி­லையில், நவ­நீ­தம்­பிள்ளை அடுத்த மாதம் கொடுக்கும் அறிக்கை பாத­க­மாக அமைந்து விடக் கூடாது என்­பதில் அர­சாங்கம் உறு­தி­யாக உள்­ள­தாகத் தெரி­கி­றது.
இதற்­காக அர­சாங்கம் நீண்­ட­கா­ல­மாக நிறை­வேற்­றாமல் இழுத்­த­டித்து வந்த சர்­வ­தேச சமூ­கத்தின் கோரிக்­கைகள் சில­வற்றை நிறை­வேற்றும் முயற்­சியில் இறங்­கி­யுள்­ளது.
நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களில் மேலும் சில­வற்றை நடை­மு­றைப்­ப­டுத்த இணங்­கி­யுள்ள அர­சாங்கம் அதன் செயல்­முறை குறித்து விப­ரிக்கும் இணை­யத்­த­ளத்­தையும் ஆரம்­பித்­துள்­ளது.
திரு­கோ­ண­ம­லையில், ஐந்து மாண­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்ட சம்­பவம் தொடர்­பாக, 11 விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­ன ரைக் கைது செய்­துள்­ளது.
காணா­மற்­போனோர் தொடர்­பாக ஆரா யும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்றை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.
தங்­கா­லையில், பிரித்­தா­னிய சுற்­றுலாப் பய­ணியின் கொலை தொடர்­பாக ஆளும்­கட்­சியின் செல்­வாக்­கு­மிக்க உள்ளூர் தலைவர் உள்­ளிட்­ட­வர்கள் மீது குற்­றச்­சாட்­டு­களை சுமத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.
யாழ்.மாவட்­டத்தில் வலி­காமம் பகு­தியில் பொது­மக்­களின் காணி­களில் அமைந்­தி­ருந்த 13 முகாம்­களை மூடு­வ­தற்கு எடுக்­கப்­பட்­டுள்ள நட­வ­டிக்கை.
இவை­யெல்லாம், ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்­ளை­யையும், சர்­வ­தேச சமூ­கத்­தையும் திருப்­திப்­ப­டுத்த அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கைகள்.
ஆனால், சர்­வ­தேச அழுத்­தங்­களின் பேரில் காணா­மற்­போனோர் தொடர்­பான ஆணைக்­கு­ழுவை நிய­மிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என்று ஜனா­தி­பதி நிரா­க­ரித்­துள்ளார்.
ஆனால், உண்மை சர்­வ­தேச அழுத்­தங்கள் தான் என்­பதில் சந்­தே­க­மில்லை.
இவற்­றை­யெல்லாம் அர­சாங்கம் தானா­கவே முன்­வந்து செய்­தது என்­பதை நம்­பு­வ­தானால், எதற்­காக இதனைச் செய்­வ­தற்கு இவ்­வ­ளவு காலமும் தேவைப்­பட்­டது என்ற கேள்­வியை எழுப்ப வேண்­டி­யி­ருக்கும்.
காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பான ஆணைக்­குழு விட­யத்தில் அர­சாங்கம் அக்­கறை காட்­டா­ம­லேயே இருந்து வந்­தது.
ஏனென்றால் அது, போரின் இறு­திக்­கட்­டத்தில், சர­ண­டைந்து காணா­மற்­போன புலி­களின் முக்­கிய தள­ப­திகள், பிர­மு­கர்கள் பற்­றிய விவ­கா­ரத்­தையும் கிள­றி­விடும் என்­பது அர­சாங்­கத்­துக்குத் தெரியும்.
எனவே தான், இந்­த­ளவு காலமும் இந்த விவ­கா­ரத்தை இழுத்­த­டித்து வந்­தது.
தனக்கு அல்­லது படை­யி­ன­ருக்குப் பாதி ப்பை ஏற்­ப­டுத்தும் என்­பதால் தான், இது­போன்று நட­வ­டிக்­கை­களை எடுக்­காமல் அர­சாங்கம் தவிர்த்து வந்­தது.
ஆனால், இப்­போது நவ­நீ­தம்­பிள்­ளையின் வருகை, கொமன்வெல்த் மாநாட்டை குறை­யே­து­மின்றி நடத்த வேண்டும் என்­ப­தற்­காக அர­சாங்கம் தனது பிடி­வா­தத்தில் சில சம­ர­சங்­களை செய்து கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.
கொமன்வெல்த் மாநாடு விவ­காரம் ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு என்­பதை விட, அந்தக் குடும்­பத்தின் கௌரவப் பிரச்­சி­னை­யா­கவே உள்­ளது.
இலங்­கையில் இதற்கு முன்னர் நடந்த மிகப்­பெ­ரிய சர்­வ­தேச மாநாடு என்றால் அது சிறி­மாவோ காலத்தில் நடத்­தப்­பட்ட அணி­சேரா நாடு­களின் தலை­வர்­களின் உச்சி மாநாடு தான்.
அதற்குப் பின்னர் சார்க் தலை­வர்­களின் மாநாட்டைத் தவிர வேறேதும் இலங்­கை யில் நடந்­த­தில்லை.
அணி­சேரா மாநாட்டைத் திறம்­பட நடத்தி, புகழ் சேர்த்த சிறி­மாவோ பண்டா­ர­ நா­யக்­கவைப் போன்று கொமன்வெல்த் மாநாட்­டினால், புகழ்­பெற நினைக்­கிறார் ஜனாதி­பதி மஹிந்த ராஜபக்ச.
அந்த திட்டம் நிறை­வே­று­வது நவ­நீ­தம்­பிள்­ளையின் கையிலும் உள்­ளது.
எனவே தான் அவ­ரது வரு­கைக்கு முன்னர் அர­சாங்கம் ஏதோ சில­வற்றைச் செய்து அவரைச் சமா­தா­னப்­ப­டுத்த முனை­கி­றது. ஆனால், அவர் அர­சாங்­கத்தின் தேவை­களை நிறை­வேற்றும் ஒரு­வ­ராக இருப்பார் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.
ஏற்­க­னவே இலங்கை அர­சாங்கம் தொடர்­பாக அவர் கொண்­டி­ருக்கும் கருத்தும், இலங்கைப் பய­ணத்தில் பக்­கச்­சார்பு நிழல் ஏதும் படிந்து விடாமல் தவிர்ப்­பதில் ஐ.நா அதி­கா­ரிகள் காட்டும் அக்­க­றையும் அத்­த­கைய எதிர்­பார்ப்­பு­களை கொள்ள வைக்­க­வில்லை.
நவ­நீ­தம்­பிள்ளை யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, திரு­கோ­ண­மலைப் பகு­தி­க­ளுக்கு பயணம் செய்­வ­தையே முக்­கிய நோக்­க­மாக கொண்­டுள்ளார்.
இந்தப் பகு­தி­க­ளுக்கு தனியார் விமா­னத் தில் அவர் பய­ணத்தை மேற்­கொள்­வ­தற்கே, ஐ.நா மனி­த­உ­ரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம் திட்­ட­மிட்­டுள்­ளது.
ஆனால், போர் முடி­வுக்கு வந்­த­வுடன், ஐ.நா பொதுச்­செ­யலர் பான் கீ மூன் இலங்கை விமா­னப்­படை ஹெலியில் பாது­காப்­பாக பய­ணத்தை மேற்­கொண்­டதைச் சுட்­டிக்­காட்டி, நவ­நீ­தம்­பிள்­ளை­யையும், விமா­னப்­ப­டையின் ஹெலி ருவர்ஸ் விமா­னங்­களை பயன்­ப­டுத்­தும்­படி அழுத்தம் கொடுத்­துள்­ளது.
பான் கீ மூன் பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்த காலத்தில், தனியார் விமா­னங்கள் போர் வல­யத்தில் பயணம் மேற்­கொள்­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டி­ருந்­தது.
அதனால், தனியார் விமா­னத்தை பான் கீ மூன் பயன்­ப­டுத்தக் கூடிய நிலை இருக்­க­வில்லை. ஆனால், இப்­போது நிலை அப்­ப­டி­யில்லை.
எந்த விமானமும் எங்கும் பயணம் மேற்கொள்ள அனுமதி உள்ளது.
அரசாங்கம் விமானப்படை விமானத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுப்பதற்குக் காரணம், தாம் விரும்பியவாறு நவநீதம்பிள் ளையின் பயணத்தை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கே என்று கருதப்படுகிறது.
பான் கீ மூன், விமானப்படை விமானங்க ளில் பயணம் செய்ததால், முக்கியமான பல இடங்களை தவறவிட்டிருந்தார்.
அரசாங்கம் எங்கெல்லாம் கொண்டு சென் றதோ அந்த இடங்களைத் தான் அவர் பார்வையிட்டார்.
யாரையெல்லாம் ஒழுங்கு செய்ததோ, அவர்களைத் தான் சந்தித்தார்.
ஆனால், அப்படியொரு தவறைச் செய்ய நவநீதம்பிள்ளை தயாராக இல்லை என்பதையே, விமானப்படை விமானத்தில் பயணத்தை மேற்கொள்ள மறுப்பு வெளியிட்டதில் இருந்து உணர முடிகிறது.
எவ்வாறாயினும், நவநீதம்பிள்ளையின் பயணத்தை தனக்குச் சாதமாகப் பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முனைந்தாலும், அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது சந்தேகம் தான்.
ஹரிகரன்

Geen opmerkingen:

Een reactie posten