தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர் கைது !

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திவெளி பிரதேசத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற பூசகர் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த நான்கு பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten