தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 8 augustus 2013

கனடாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்து திட்டமிட்டபடி நடைபெறும்


ததேகூ இன் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் ம.அ. சுமந்திரன், நா. உ இருவரும் எதிர்வரும் ஓகஸ்ட் 11, 2013 (ஞாயிறு) அன்று ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறோம்.
கனடாவுக்கான இவர்களது பயண ஒழுங்குகள் நிறைவு செய்யப்பட்டுவிட்டது. எதிர்வரும் ஓகஸ்ட் 9 (வெள்ளி) ரொறன்ரோ வரும் இவர்கள் அடுத்த நாள் (சனிக்கிழமை) இங்குள்ள மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், ஊர்ச்சங்க சார்பாளர்கள் போன்றோரைச் சந்திக்கிறார்கள். பின்னர் ஓகஸ்ட் 11 (ஞாயிறு) அன்று இரவு விருந்தில் கலந்து கொள்கிறார்கள். அடுத்த நாள் (திங்கள்) காலை அமெரிக்கா செல்கிறார்கள்.
எனவே ததேகூ (கனடா) ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்து திட்டமிட்டபடி நடைபெறும் அதில் மாற்றம் இல்லை என்பதை தமிழ் உணர்வாளர்களுக்கு அன்போடு அறியத்தருகிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
தொடர்பு:
416 303 4360
416 281 1165
416 282 0947

Geen opmerkingen:

Een reactie posten