தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 17 augustus 2013

நவனீதம்பிள்ளைக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் அவசர மகஜர்- சிரானி பண்டாரநாயக்கவை நவி.பிள்ளை சந்திப்பார்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, அரச சார்பற்ற நிறுவனங்கள் அவசர மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
47 அரச சார்பற்ற நிறுவனங்கள் இவ்வாறு அவசர மகஜரை அனுப்பி வைத்துள்ளன.
முன்னாள் புலி உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிடுமாறு நவனீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மக்களை தனிப்பட்ட ரீதியில் சந்தித்து விசாரணை நடத்துமாறும் கோரியுள்ளனர்.
நீதிமன்ற அறிக்கை, பொலிஸ் அறிக்கை மற்றும் அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களை பார்வையிடுமாறு கோரியுள்ளனர்.
வடக்கு விஜயத்தின் போது இலங்கை இராணுவத்தினதோ அல்லது பொலிஸாரினதோ உதவியைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளனர்.
பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 800 புலிச் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மகஜரை அனுப்பி வைத்து நபர் சிங்கப்பூரிலிருந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நவனீதம்பிள்ளை சிரானி பண்டாரநாயக்கவை சந்திப்பார்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை சந்திக்க உள்ளார்.
நவனீதம்பிள்ளை சிரானி பண்டாரநாயக்கவை சந்திப்பார்!எதிர்வரும் 25ம் திகதி நவனீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
கடந்த மார்ச் மாதம் குற்றப் பிரேரணை ஒன்றின் மூலம் முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க பணி நீக்கப்பட்டிருந்தார்.
பணி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னர், சர்வதேச பிரதிநிதி ஒருவரை, சிரானி பண்டாரநாயக்க சந்திக்கும் முதல் சந்தர்ப்பமாகும்.
இதற்கு முன்னா சர்வதேச நீதவான்கள் சங்க அமர்வில் ஸ்கைப் தொழில்நுட்பம் மூலம் உரையாற்ற ஏற்பாடு செய்யபட்டிருந்த போதிலும், இறுதி நேரத்தில் தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக இந்த முயற்சி தடைப்பட்டது.
எவ்வாறெனினும் எந்த இடத்தில் எப்போது இந்த சந்திப்பு நடைபெறும் என்பது இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
நவனீதம்பிள்ளை யாரை சந்திக்க வேண்டும் யாரை சந்திக்கக் கூடாது என்பது குறித்த தீர்மானங்களை எடுக்கும் உரிமை அரசாங்கத்திற்கு கிடையாது என ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten