தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 12 augustus 2013

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம்! கொன்சர்வேடிவ் கட்சி விமர்சனம் !

புகலிடக் கோரிக்கையாளர்கள்  குறித்த அவுஸ்திரேலியாவின் புதிய சட்டம் தொடர்பில் அந்த நாட்டின் கொன்சர்வேடிவ் கட்சி விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு முன்னணி வேட்பாளர்களுக்கு இடையிலான முதலாவது நேரடி தொலைக்காட்சி விவாதம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தற்போதைய பிரதமர் கெவின் ரூட் மற்றும் கொன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் டோனி அபோட் ஆகியோர் பங்கேற்ற இந்த விவாதத்தில் படகுகள் முலம் அவுஸ்திரேலிய செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
புகலிடக் கோரிகையாளர்களை பாப்புவா நியூகினிக்கு அனுப்பும் பிரதமர் ரூட்டின் கொள்கையை இதன்போது விமர்சித்த கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர் அந்த திட்டம் நடைமுறைக்கு சாத்தியமற்றது என கூறியுள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த புகலிடக் கோரிகையாளர்கள் வருடந்தம் படகுகள் மூலம் சட்டவிரோதமாக செல்லுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சட்டவிரோதமாக படகொன்றில் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயசித்த போது தென் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 28 இலங்கையர்களை காலி துறைமுகத்திற்கு அழைத்துவர கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten