வடமேல் மாகாணத்தின் பல பகுதியில் பதிவு இலக்கம் இல்லாமல் இராணுத்தினர் பயன்படுத்தும் டிபென்டர் வகை வாகனங்களின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வடமேல் மாகாணத்தை சேர்ந்த அரசாங்க அமைச்சர்கள் மற்றம் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வகையான வாகனங்கள் எந்த வகையான பதிவு ஆவணங்களும் இல்லாமல், மாகாணத்தின் பல பகுதிகளில் நடமாடித் திருப்பதாக அவர்கள் தெரித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் ஊடாக விசாரணை நடத்துமாறும் கோரப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, மங்களகம கிராமத்தில் ரிப்பர் ரக வாகனம் குடைசாய்வு
மட்டக்களப்பு, மங்களகம கிராமத்தில் நேற்று மாலை கருங்கல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த ரிப்பர் ரக வாகனம் ஒன்று, வீதியை விட்டு விலகிச் சென்று குடைசாய்ந்துள்ளது.
இந்த ரிப்பர் ரக வாகனத்தின் சாரதியும் உதவியாளரும் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணையை மங்களகம பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten