[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 12:39.35 PM GMT ]
நேற்று அவரின் குடும்பத்தில் எற்பட்ட தகராறு காரணமாக கோபமடைந்த இந்த யுவதி வீட்டின் அருகில் நின்ற அலரி மரத்தின் விதையினை எடுத்து உண்டுள்ளார்.
இலங்கை கடற்பிரதேசத்தில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கடற்படையினருக்கு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உத்தரவிட்டுள்ளார்.
வீட்டில் மணக்கமுற்ற இவரை களுவாஞ்சிகுடி ஆரார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு அனுப்பப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் இவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் குநித்து வெல்லாவெளி பொலிசார் வீட்டு உறவினர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்யுங்கள்: அமைச்சர் ராஜித கடற்படையினருக்கு உத்தரவு
[ சனிக்கிழமை, 10 ஓகஸ்ட் 2013, 01:05.53 PM GMT ]
இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சென்றிருந்த அமைச்சர், மாதகல் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
இதன்போது, குறித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் மற்றும் சாதாரண படகுகளில் பெருமளவான இந்திய மீனவர்கள் வந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையை கடற்படையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று மாதகல் கடற்தொழிலாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த பிரதேச கடற்படை அதிகாரியை அழைத்த கடற்றொழில் அமைச்சர், எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று பணிப்புரை விடுத்தார்.
இவ்வாறு கைது செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் மட்டுமே எம்மால் கைது செய்ய முடியும் என்று கடற்படை அதிகாரி தெரிவிக்க, இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் நான் பேசிக் கொள்கிறேன், கடற்றொழில் சார்ந்த அமைச்சராக நான் இருக்கிறபடியால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவை எனக்கும் இருக்கிறது.
எனவே இவ்வாறான சம்பவங்களுக்கு கடற்படையினர் அனுமதிக்காது எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten