வடக்கு மக்களின் காணி உரிமைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஐக்கியத்தை உறுதிப்படுத்தி நாட்டை முன்நோக்கி நகர்த்த அரசாங்கம் விரும்பவில்லை. வடக்கு மக்களின் காணி உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு காணி உரிமைகள் வழங்கப்பட்டன.
அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் காணப்பட்டால் ஏன், காணி அதிகாரங்களை வழங்க தயக்கம் காட்டுகின்றது.
வடக்கில் அரசாங்கம் தனக்கு தேவையான வகையில் குடியேற்றங்களை அமைத்து வருகின்றது என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்: ஜே.வி.பி
வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் அவர்களுக்கு மீள வழங்கப்பட வேண்டுமென ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
காணி என்பது அசையா சொத்தாகும்.
காணி என்பது அசையா சொத்தாகும்.
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஒருவரின் காணியையும் அரசாங்கம் சுவீகரித்துள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் சாதாரண மக்களின் நிலை பற்றி சொல்லத் தேவையில்லை.
வடக்கில் சிங்கள மக்களை குடியேற்றினால் தமிழ் மக்களின் சந்தேகம் வலுப்பெறும்.
இது வயிற்றில் குண்டு கட்டி தாக்குதல் நடாத்தும் அளவிற்கு வளர்ச்சியடைக் கூடும்.எனவே வடக்கு தமிழ் மக்களின் காணிகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தமிழ் மக்களுக்கு காணிகளை வழங்காது ஏ9 வீதியை அமைப்பதில் பயனில்லை.காணிப் பிரச்சினை குறித்து விசாரணை நடாத்த சுயாதீன ஆணைக்குழு உருவாக்கப்பட வேண்டும்.
முகாம்களை அமைப்பதற்காக தமிழ் மக்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு இன்னமும் நட்ட ஈடு வழங்கப்படவில்லை.
வடக்கில் அரசாங்கம் புதிய கலாச்சாரமொன்றை திணிப்பதற்கு முயற்சிக்கின்றது. தமிழ் மக்கள் மீது பௌத்த தர்மத்தை திணிக்க முயற்சிக்கின்றது என விஜித ஹேரத் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எமது மக்களுக்கு தனி இராச்சியம் தேவையில்லை- சுவாமிநாதன்
எமது தமிழ் மக்களுக்கு தனி இராச்சியம் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரவித்துள்ளார்.
ஏனைய இனங்களுக்கு பொதுவான சம உரிமைகள் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
மக்களுக்கு சொந்தமான காணிகளை படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில் 5000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும்.
எமது பிரதேச மக்களின் காணிகள் பெருமளவில் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
எமது பிரதேச மக்களின் காணிகள் பெருமளவில் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற ஆர்வம் காட்டுகின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த அரசாங்கம் நாட்டம் காட்டத் தவறியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten