தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 7 augustus 2013

சர்வதேச அழுத்தங்களே தேர்தல் நடத்துவற்கு காரணம்: கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தன்

முதலமைச்சராக பதவியேற்பது 05 வருடங்களுக்காகவே அன்றி 06 மாதங்களுக்காக அல்ல!- தயாசிறி ஜயசேகர - அரசியல் என்பது நிதானமாக செல்ல வேண்டிய பயணம்!- ரணில்
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 11:00.05 AM GMT ]
முதலமைச்சராக பதவியேற்று ஆறு மாதங்களின் பின்னர், நாடாளுமன்றத்திற்கு செல்லப் போவதாக தன்னைப் பற்றி சிலர் செய்து வரும் பிரசாரங்களில் உண்மையில்லை எனவும் தான் ஐந்து வருடங்களுக்காகவே முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகவும் ஆளும்கட்சியின் வடமேல் மாகாண சபை வேட்பாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
குருணாகல் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபையின் இடர் முகாமைத்துவ அமைச்சு முதலமைச்சரின் பொறுப்பிலேயே உள்ளது. வட மேல் மாகாணத்தில் காட்டு யானைகளில் தொல்லை அதிகரித்துள்ளது.
வடமேல் மாகாண முதலமைச்சராக தெரிவாகி 22 மாதங்களில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பேன். இதனை இலகுவாக செய்ய முடியும். எவராவது முடியாது என்று கூறினால், அதனை நான் செய்து காட்டுவேன்.
தயாசிறி முதலமைச்சராவது உறுதியாம், எனினும் முதலமைச்சராகி 6 மாதங்களின் பின்னர், நாடாளுமன்றத்திற்கு செல்வாராம். அதன் பிறகு நானே முதலமைச்சர் என சிலர் கூறி வருகின்றனர்.
தயாசிறி முதலமைச்சராக பதவியேற்பது 05 வருடங்களுக்காக என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இதனை எவரும் பிரச்சினையாக்கி கொள்ளக் கூடாது.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியுடன் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் இருந்து. ஆனால் இந்த தயாசிறி கட்சியினரை அவ்வாறு காட்டிக்கொடுக்க மாட்டான் என்றார்.
அரசியல் என்பது நிதானமாக செல்ல வேண்டிய பயணம் - ரணில்
அரசியல் என்பது நிதானமாக செல்ல வேண்டிய பயணம் என்பதை உணர்ந்து அதன் அடிப்படையில் செயற்பட தயாசிறி ஜயசேகரவுக்கு முடியாமல் போனது துரதிஷ்டவசமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்து தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் போதே ரணில் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தயாசிறி ஜயசேகர, அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்ததை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியில் உள்ள பலர் அறிந்தே இருந்தனர்.
நாடாளுமன்றத்திற்குள் கட்சி தாவி அமைச்சர் பதவியை பெற்று கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டதால், வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இருந்தே தயாசிறி, அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நடத்தியதால், அவருக்கு தேசிய ஊழியர் சங்கத்தின் தலைவர் பதவியை வழங்க சிரேஷ்ட தலைவர்கள் விரும்பவில்லை என்றார்.

சர்வதேச அழுத்தங்களே தேர்தல் நடத்துவற்கு காரணம்: கூட்டமைப்பு வேட்பாளர் த.சித்தார்த்தன்
[ புதன்கிழமை, 07 ஓகஸ்ட் 2013, 10:54.11 AM GMT ]
இலங்கை அரசாங்கத்தின் மீது சர்வதேசம் மிகப் பெரிய அழுத்தத்தினைக் கொடுத்தமையினாலே வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் கருத்து வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்தத் தேர்தலை சாதாரண ஒரு மாகாணசபைத் தேர்தலாக நாங்கள் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் வருவதற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள்தான் நிச்சயமாக காரணமாக இருந்திருக்கின்றது.
இந்நாடுகள் அனைத்துமே மிகப் பெரிய அழுத்தத்தை இலங்கை அரசுமீது கொடுத்திருந்தது. அதனால்தான் இந்த மாகாணசபைத் தேர்தல் வருகின்றது. 
இந்தத் தேர்தலின் பெறுபேறுகளை எங்களுடைய விடயத்திலே அக்கறையுள்ள உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஆகவே தமிழ்மக்கள் ஒரு சரியான பதிலை, ஒரு உறுதியான செய்தியை இந்தத் தேர்தல் மூலம் கொடுக்க வேண்டும்.
நான் இந்தத் தேர்தல் சம்பந்தமாக பார்க்கின்றபோது, மக்கள் அக்கறையெடுத்து வாக்களிக்கச் செல்வார்களா? என்ற கேள்வியெழுகிறது. ஏனென்றால் கடந்தகால தேர்தல்களைப் பார்க்கின்றபோது மக்கள் தேர்தல்களிலே ஆர்வம் காட்டுவது குறைவு. இப்போதுகூட மக்கள் மத்தியில் அந்த ஆர்வம் நிச்சயமாக இல்லை.
எனவே அந்த ரீதியிலே நாங்கள் மக்களை ஊக்குவிக்க வேண்டும். மக்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தினை எடுத்துக்கூறி அவர்களை வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு செல்வதும், அவர்களை வாக்களிக்கச் செய்வதும்தான் தொண்டர்கள் மற்றும் கட்சிகளைச் சார்ந்தவர்களின் முதலாவது கடமையாக இருக்கவேண்டும்.
வாக்களிப்பதன் மூலம்தான் தமிழ் மக்கள் இன்றும் தங்களுடைய உரிமையை வேண்டி நிற்கின்றார்கள் என்கிற ஒரு செய்தியை கொடுக்க முடியும்.
இன்று எங்களுக்கிருக்கின்ற ஒரேயொரு பலம் இந்த வாக்கு. இந்த வாக்கின்மூலம் ஒரு நியாயமான செய்தியினை உலகத்திற்கு சொல்லி எங்களுடைய பிரச்சினையிலே அக்கறை காட்டுகின்ற நாடுகளின் அழுத்தத்தின்மூலம் ஒரு நியாயமான தீர்வினைக் கொண்டுவர முடியுமென நம்புகின்றோம் என்று தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten