அமெரிக்காவும், இலங்கையும் சில விடயங்கள் குறித்து வேறுபட்ட கருத்தை கொண்டுள்ள போதிலும், அமெரிக்காவுடனான உறவில் எந்தவித பாதிப்பும் இல்லை என இலங்கை தூதுவர் கூறுகிறார்.
இலங்கையில் இடம்பெற்ற மோதல்களை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா பல்வேறு விதத்தில் உதவியதாக அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவின் தொழிநுட்பம், பயிற்சி, புலனாய்வு தகவல் பரிமாற்றல் மற்றும் அமெரிக்காவில் தமிழீழ விடுதலை புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடம் அளிக்காமை போன்றவற்றின் காரணமாகவே இலங்கை தமது குறிகோளை அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தவிர யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்திக்கு அமெரிக்கா பாரிய உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten