தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 6 augustus 2013

படம் எடுக்க ராஜபக்ச பணம் கொடுத்தாரா? சென்னையில் "மெட்ராஸ் கபே" நாயகன் பதில்!


கல்லடிப் பாலத்தில் குதித்து யுவதி தற்கொலை முயற்சி- இருவேறு வாகன விபத்துக்களில் 5 பேர் பலி - யாழ் பிறவுண் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 02:17.14 PM GMT ]
மட்டக்களப்பு, கல்லடி பாலத்தில் இருந்து தற்கொலை செய்ய முயன்ற இளம் பெண்ணை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
சற்று முன்னர் கல்லடி பாலத்தில் இருந்து வாவிக்குள் இளம் பெண்னொருவர் குதித்துள்ளார். இந்த வேளையில்  அப்பகுதியில் நின்றிருந்த பொலிஸார் வாவியில் குதித்தவரை காப்பாற்றியுள்ளனர்.

மாலை 5 மணி தொடக்கம் குறித்த பெண் அப்பகுதியில் சுற்றித்திரிந்த நிலையில் அவரை பொலிஸார் அவதானித்துக் கொண்டிருந்தபோதே அவர் வாவியில் குதித்த நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சுமார் 25 நிரம்பியவர் எனவும் தாழங்குடா பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். வாவியில் குதித்தவர் காப்பாற்றப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
புதிய கல்லடி பாலத்தில் முதலாவது தற்கொலை முயற்சியாக இது பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இருவேறு வாகன விபத்துக்களில் 5 பேர் பலி
கொழும்பு - அவிசாவளை வீதியில் களுக்கல்ல என்ற பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதியில் சென்ற மூச்சக்கர வண்டி மீது வேன் மற்றும் பஸ் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. மூச்சக்கர வண்டியில் சென்றவர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சல்லவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வான் சாரதி மதுபானம் அருந்தியிருந்ததுடன் அவர் போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பஸ் மற்றும் வேன் சாரதிகள் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர் எனவும் பொலிஸார் கூறினர்.
அதேவேளை தங்காலை மாவெல்ல பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மூச்சக்கர வண்டி ஒன்றில் மோதியத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ் பிறவுண் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயம்
யாழ்ப்பாணம் பிறவுண் வீதிப் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கு அருமையிலுள்ள சந்தியில் வடிரக வாகனமும், மோட்டார் சைக்களும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்தவர் காயமடைந்துள்ளார்.
விபத்துக்குள்ளான வடிரக வாகனம் விபத்துக்குள்ளான அடுத்த நிமிடமே அதன் சாரதி வாகனத்தின் இலக்கத்தை கழட்டி விட்டார்.
குறித்த வாகனம் தற்போது யாழ் பொலிஸ் நிலையத்தில் இலக்கத்தகடு இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அரியாலை ஏ-9 வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அரியாலை யூதாகோவில் சந்திப்பகுதியில் ஹன்ரர் வாகனத்தை முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வருகைதந்த தனியார் பேரூந்து முந்திச் செல்ல முற்பட்டவேளை விளம்பரப் பதாகை தட்டிகைள மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனால் பேரூந்தில் பயணித்த பயணி ஒருவரும், ஹன்ரரில் பயணித்த ஒருவரும் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

படம் எடுக்க ராஜபக்ச பணம் கொடுத்தாரா? சென்னையில் "மெட்ராஸ் கபே" நாயகன் பதில்!
[ திங்கட்கிழமை, 05 ஓகஸ்ட் 2013, 01:53.47 PM GMT ]
ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் மெட்ராஸ் கபே. இலங்கை சம்மந்தப்பட்ட கதையுடைய இந்தப் படத்தை  எடுக்க இலங்கை அதிபர் ராஜபக்ச பணம் கொடுத்தாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த விஷயத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று பதில் அளித்தார்.
இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கிற திரைப்படம் மெட்ராஸ் கஃபே. இப்படம் தமிழிலும் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் கதை இலங்கை சம்மந்தப்பட்டது என்பதால், அங்கு படப்பிடிப்பு நடைபெற்றது.
ஈழத்தமிழர்களை தவறான விதத்தில் சித்தரித்திருப்பதாக கூறி, தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சிலர் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும் படம் வெளியாவதற்கு முன்பு தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னையில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் திங்கட்கிழமை மாலை செய்தியாளர்களை நடிகர் ஜான் ஆபிரகாம் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்தப் படத்தில் யாரைப் பற்றியும் குறை சொல்லவில்லை. நீண்ட ஆய்வுக்குப் பிறகு இந்தப் படத்தின் கதையை படமாக்கியுள்ளோம். யாருடைய மனமும் புன்படும் விதமாக இந்தப் படம் அமையாது.
இலங்கையில் நடந்த விஷயங்களை காண்பித்திருக்கிறோமே தவிர, அதை ஆதரிப்பதாகவோ, எதிர்ப்பதாகவோ படத்தில் எந்த கருத்தையும் நாங்கள் சொல்லவில்லை. அதையும் மீறி சிலர் அரசியல் நடத்த நினைத்தால் நான் என்ன செய்ய முடியும்.

விடுதலைப் புலிகளைப் பற்றியோ, ஈழத்தமிழர்களைப் பற்றியோ, இலங்கை அரசைப் பற்றியோ எந்த விமர்சனமும் இந்தப் படத்தில் இல்லை.
நானும் ஒரு இந்திய குடிமகன்தான். எனக்கென்று சில பொறுப்புகள் இருக்கின்றது. இந்த சமூகத்தைப் பற்றிய தவறான கருத்தை நான் சொல்லமாட்டேன்.
இந்தப் படத்தை சில தமிழ் அமைப்புகள் முன்கூட்டியே திரையிட்டு காண்பிக்க வேண்டும் என்றனர்.
அவர்கள் கோரிக்கையின்படி படத்தை திரையிட தயார். அவர்கள் படம் பார்த்த பிறகு ஆதரவு தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
படம் வெளிவருவதற்கு முன்பாக இதுபோன்ற சலசலப்புகள் வரத்தான் செய்யும். படம் வெளிவந்த பிறகு நாம் இந்தப் படத்தின் விஷயங்களை விவாதிப்பதே ஆரோக்கியமானது என்றார்.

இந்தப் படம் எடுக்க இலங்கை அதிபர் ராஜபக்ச பணம் கொடுத்தாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்த விஷயத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் கேட்டால் மிகவும் வருத்தப்படுவார்கள் என்று பதில் அளித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten