தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 9 augustus 2013

பகிஷ்கரிப்பில் குதித்தனர் மருத்துவர்கள்: ஸ்தம்பித்தது தெல்லி. மருத்துவமனை !


தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்களின் பணிப்பிற்கு கீழ்ப் படியாமலும், சேவையில் அதிக நாட்டமின்றியும் இருக்கும் தாதிய உத்தியோகத்தரின் செயற்பாட்டிற்கு எதிராக வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் உளநல விடுதியில் பணியாற்றும் குறித்த ஆண் தாதிய உத்தியோகத்தர் அங்கு தங்கியிருக்கும் உளநல நோயாளர்களுடன் பழகும் விடயம், மற்றும் வைத்தியர்களின் பணிப்பினை உதாசீனம் செய்தல் என தனது கடமையினை சரிவர செய்யாமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே இவர் மீது தனது கடமையில் உதாசீனம் செய்வதனை எதிர்த்து வைத்தியர்கள் நேற்றுக் காலை பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் சிவராணி வைத்தியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது உளநல விடுதியில் இருந்து குறித்த தாதிய உத்தியோகத்தரை வேறு பிரிவுக்கு இடமாற்றுமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து அவர் வேறு பிரிவிற்கு தற்காலிகமாக இடமாற்றப்பட்டதுடன், அவர் மீதான விசாரணைகள் தொடரவுள்ளன. இதனையடுத்து வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு முடிவுக்கு வந்தது.

Geen opmerkingen:

Een reactie posten