கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அடுத்து, கிழக்கு வாழ் முஸ்லிம்கள் கொழும்பு செல்வதை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்புக்கான அத்தியாவசியமான பயணங்களைக் கூட பலர் கைவிட்டிருப்பதாக அறியமுடிகிறது.
இதேவேளை கொழும்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய வைத்திய சிகிச்சைகள், நேர்முகப் பரீட்சைகள், வெளிநாட்டுப் பயண ஏற்பாடுகள் என்பனவற்றைக் கூட பலரும் பின்போட்டுள்ளனர்.
கொழும்பு நிலவரத்தை உன்னிப்பாக அவதானித்து அறிந்து கொள்வதிலும் சாதாரண மக்களும் கூட ஆர்வமாகவுள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
கொழும்பிலிருந்து வெளியாகும் தேசிய நாளேடுகள், கடந்த ஓரிரு தினங்களாக கிழக்கு மாகாணத்தில் அதிகம் விற்பனையாவதாக விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten